மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகை கிடையாதாம் - ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகை கிடையாதாம் - ஒன்றிய அரசு

புதுதில்லி, ஜூலை 21- ரயில்வே வருமானம்  அதிகரித் தும்  மூத்த குடி மக்களுக்கு சலுகையை மறுப்பது ஏன்? என்று  நேற்று (20.7.2022) நாடாளுமன்றத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப் பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப் பினார். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதில்  அளித்துள்ளார்.  

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021- 2022 இல் அய்ந்து கோடியே 55  லட்சம் மூத்த குடிமக்கள் பயணம் செய்த தாகவும் 2019-2020 இல் கோவிட்டுக்கு முன்பு 6. 18 கோடி மூத்த குடிமக்கள் பயணம் செய்ததாகவும் பதில் அளித்துள்ளார்.   2019 -20 இல் ரூ.4529 கோடியாக பயணிகள் கட்டண வருமானம் இருந்தது.  அதுவே 2020 - 21 இல் 2880 கோடியாக கோவிட்டால் குறைந்தது. அதன் பிறகு 2021 -22 இல் பயணி கள் வருமானம் வழக்கமான நிலையை  எட்டி ரூ.4008 கோடியை அடைந்துள் ளது. அதாவது கோவிட்டுக்கு முந்தைய நிலையை நெருங்கி வருமானம் எட்டி விட்டது  என்றும் அமைச்சர் பதிலில் தெரிவித் துள்ளார். மூத்த குடிமக்கள் 2019- 20 இல்  6.18 கோடி பேரும், 2020- 21 இல் 1.90  கோடி பேரும், 2021- 22 இல் 5.55  கோடி பேரும் பயணம் செய்துள்ள னர் என்று அமைச்சர் பதில் அளித்துள் ளார்.  இப்பதில்கள் நமக்கு பல உண்மை களை தெரிவிக்கின்றன.

வருவாய் குறைந்துள்ளதால் சலுகை கட்டணம் வழங்க இயல வில்லை என்ற காரணம் தற்போது இல்லை. பயணிகள் கட்டண வருவாய் கோவிட்டுக்கு முந்தைய நிலையை நெருங்கி விட்டது. இருந்தாலும் அரசு மறுக்கிறது.  இரண்டாவதாக மூத்த குடிமக்கள் பயண எண்ணிக்கை அதிகரித்தாலும் கோவிட்டுக்கு முந்தைய காலத்தை விட குறைவாக உள்ளது. கட்டண சலுகை மறுக்கப்படுவதே இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு கார ணமாக இருக்கிறது. ஓய்வு கால வரு மானம் பலரின் அன்றாட வாழ்க்கைக்கே  போதுமானதாக இல்லாத நிலையில் அவர்களின் மனித உறவுகள் கூட பறிக்கப்படுவதன் அடையாளம் இது. குடும்பம், நட்பு சார்ந்த நிகழ்வுகளைக் கூட தவிர்க்க வேண்டிய சூழலை அரசு உருவாக்கியுள்ளது. சலுகை கட்டணம் வழங்கப்பட்டு இருந்தால் ரயில்வே வருவாயும் அதிகரித்து இருக்கும்.  மூன்றாவது, மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்தால் அரசுக்கு கூடுதல் வருமானம் எவ்வளவு என்று  கணக்கிட இயலவில்லை என்று அமைச்சர் பதில் அளிப்பது முரண் பாடாக உள்ளது. 2019 - 20 இல் சலு கையை தந்ததால் ரூ.1667 கோடி  இழப்பு என்று கணக்கு போட முடிகிற அரசாங்கத்திற்கு, கட்டண சலுகை ரத்து காரணமாக எவ்வளவு மிச்சம் என்ற கணக்கு தர முடியவில்லை என்பதை எப்படி நம்புவது? “டிஜிட்டல் இந்தியா” இப்படி எளிய மக்களின் கணக்கை போடாது என்றால் அது பாரபட்சம் அல்லவா? 

எனவே பயணிகள் வருமானம் இப்போது பழைய நிலையை  நெருங்கிய பிறகும் மூத்த குடிமக்க ளுக்கான பயண சலுகையை திரும்ப வழங்க மறுப்பது நியாய மற்றதாகும். ஸ்பெயின் போன்ற நாடுகளில் விலைவாசி உயர்வை சரிசெய்ய அனைத்து பயணிகளுக்கும் இலவச பயணம் அளிக்கிறார்கள்.  இந்திய ரயில்வேயில் இலவச பயணம் கூட மூத்த குடிமக்கள்  கோர வில்லை. கொடுத்து வந்த பயண சலுகையையாவது திரும்பத் தாருங்கள் என்று தான் கேட்கிறார்கள்.  கருணை அற்ற அரசு கண்மூடித்தன மாக நிராகரிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment