கவிஞர் கலி.பூங்குன்றன்
பொறுப்பாசிரியர், 'விடுதலை'
ஆரியூர் கிராமம் விழுப்புரம் வட்டத்தைச் சேர்ந்தது.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இதுவரை எவரும் செய்யாத அரும்பெரும் இலட்சியப் பணியைச் செய்துள்ளனர்.
‘விடுதலை'யால் விடுதலை பெற்றோம் என்ற தங்களின் நன்றி உள்ளத்தைத் திறந்து காட்டியுள்ளனர்.
‘விடுதலை' வெறும் காகிதம் அல்ல - உரிமைப் போருக்கான ஆயுதம் என்பதைத் தங்களின் பட்டறிவால் அறிந்த பகுத்தறிவாளர் வாழும் பகுதி என்பதை மெய்ப்பித்து விட்டனர்.
மனிதனுக்கு அடையாளம் நன்றி உணர்வுதானே! கடந்த 88 ஆண்டுகளாக ‘விடுதலை' ஏடு பட்டபாடு கொஞ்சமா? சந்தித்த அழிபழி வழக்குகளுக்குத்தான் பஞ்சமா?
கேட்கப்பட்ட ஜாமீன் தொகையும்தான் எத்தனை! எத்தனை!!
நெருக்கடி நிலை காலத்தில் நெருப்பாற்றில் நாள்தோறும் நாள்தோறும் கரைசேர்ந்த கதையைத்தான் சொல்லி முடியுமா?
‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே!' என்கிற மனுவின் சட்டத்தால் கல்விக் கண்ணிழந்த மக்கள் கண்ணொளி பெற்றது எப்படி?
‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?' என்று ஆக்கி வைத்திருந்த அடிமைத்தனத்தின் முகத் திரை கிழிக்கப்பட்டதே - யார் காரணம்? எது காரணியம்?
பிறப்பில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் என்ற பேதத்தைப் பிறப்பித்த சுருதி, ஸ்மிருதி, இதிகாசப் புராணங்களின் வேரில் ‘அணுகுண்டு' வீசிய அசகாய சூரன் யார்?
பெண்ணென்றால் பேதை என்று ஆக்கப்பட்ட போதை ஏறிய மதத்தின் மண்டையைப் பிளந்த பீரங்கி எது?
‘விடுதலை', ‘விடுதலை', ‘விடுதலை' அல்லவா! அதன் ஆசான் தந்தை பெரியார் அல்லவா!
88 ஆண்டுகளாக ஏறுநடை போடும் அந்த ‘விடுதலை'யின் ஆசிரியராக 60 ஆண்டுகாலமாக அரும்பணியாற்றும் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் அல்லவா!
‘ஆசிரியர்' என்று சொன்னால், அது ‘விடுதலை' ஆசிரியரைத்தான் குறிக்கும் என்ற அரும்புகழ் பெற்ற அய்யாவின் சீடர் அல்லவா!
அவரின் 60 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியர் பணிக்கு 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களை அளிப்பது என்ற திராவிடர் கழகத்தின் தீர்மானம் கண்டு திகைக்கின்றனர்.
முடியக்கூடிய காரியமா? என்று கேள்வி கேட்ப வர்களும் உண்டு.
ஆசிரியரின் 50 ஆண்டுகால ‘விடுதலை' பணியை யொட்டி 50 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களை அளித்து சரித்திரம் படைக்கவில்லையா கருஞ்சட்டைப் படை?
அதே கண்ணோட்டம்தான் இப்பொழுதும். கழக செயல் மறவர்கள் ‘விடுதலை', ‘விடுதலை' என்று வேகப் பந்து வீச்சு போல வீதிதோறும் சுழன்று வருகின்றனர்.
தோழர்களிடமிருந்து வரும் தகவல்கள் நம் நெஞ்சை நிமிரச் செய்கின்றன. நமது ஆசிரியர் அவர்களின் உள்ளம் உற்சாகத்தால் துள்ளிக் குதிக்கிறது.
இந்த வரிசையில் ஆரியூரில் இருந்து வந்த செய்தி ஆகாயத்துக்கும், பூமிக்குமாக நமது உணர்வை உத்வேகப்படுத்தியுள்ளது.
ஆரியூரைச் சேர்ந்த ‘வாழும் வரைக்கும் வள்ளுவம்' என்ற நூலை எழுதிய பேராசிரியர் மானமிகு
அ.செகதீசன் அவர்களின் அருமை மகள் மானமிகு
செ.திருமாமணி அவர்களால் அனுப்பப்பட்ட செய்திதான் அது.
அந்தச் சிற்றூரைச் சேர்ந்த 113 இருபால் தோழர் களும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை காசோலை யாக ‘விடுதலை' சந்தாவுக்காக நமது ஆசிரியர் அவர்களுக்கு அனுப்பி வைத்தனர் என்றால், சாதாரணமானதுதானா?
மிட்டா மிராசுகள் அல்ல; சிற்றூரைச் சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் -
இந்த ‘விடுதலை' தானே நமக்குக் கல்விக் கண்ணொளியைத் தந்தது.
இந்த ‘விடுதலை'தானே நம்மை - நம் வீட்டுப் பிள்ளைகளை உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்தது.
இந்த ‘விடுதலை'தானே பொது வீதிகளில் நடக்கவும், பொதுக் கிணற்றிலும், குளத்திலும் நீர்ப் பருகும் நீங்கா உரிமைக்காக வரிந்துகட்டிப் போராடி வெற்றிக் கொடியை நம் கரங்களில் தவழச் செய்தது!
இந்த ‘விடுதலை'தானே இன்றைக்கும்கூட, சமூக நீதிப் பறவையைக் கொத்திக் குடலறுக்கப் பறந்துவரும் வஞ்சக வல்லூறுகளை விரட்டி விரட்டி அடித்து இறக்கைகளை வெட்டிச் சாய்த்துக் கொண்டு இருக்கிறது.
அந்த நன்றி உள்ளம் வற்றிப் போய்விடவில்லை. நன்றி உணர்வு என்னும் குருதி நாடி நரம்புகளில் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் ஆரியத்தை விரட்ட வந்த ஆரியூர் என்னும் குக்கிராமம்.
ஆரியூரை விஞ்சப் போகிறவர்கள் யார்?
ஆரியூரைப் போல் வரலாற்று மகுடத்தில் மாணிக் கக் கற்களாக ஜொலிக்கப் போகும் ஊர்களின் பட்டியல் எங்கே? எங்கே?
பார்ப்போம், பார்ப்போம்!
ஆரியூர் கிராமம், காலனி மாரியம்மன் கோவில் தெரு, வெங்கந்தூர் (அஞ்சல்), விழுப்புரம் தாலுகா - 605 402
'விடுதலை' சந்தா அளித்தவர்களின் விவரம்
1. எம்.ஜெயமுருகன், த/பெ. ஏ.முனியன்
2. கே.தனசேகரன், த/பெ.கே.கலியன்
3. பி.உலகநாதன், த/பெ. யு.பாலு
4. பி.குமரேசன், த/பெ.ஆர்.பாபு
5. எஸ்.மஞ்சுளா, த/பெ.சாரங்கபாணி
6. எஸ்.எத்திராஜ், த/பெ. ஆர். சவுந்தர்
7. பி.சரசு, த/பெ.டி.பாலு
8. வி.அய்யப்பன், த/பெ.எம்.வீரப்பன்
9. ஆர்.குருநாதன், த/பெ.ராசு
10. வி.சத்தியா, த/பெ. கே.வெங்கடேசன்
11. எம்.உதயகுமார், த/பெ. கே.முருகன்
12.கே.மணி, த/பெ. கே.கலியன்
13. ஏ.வேலப்பன், த/பெ. கே.அண்ணாதுரை
14. ஆர்.இலக்கியா, த/பெ. கே.ரவி
15. ஏ.தினகரன், த/பெ. கே.அரிகோவிந்தன்
16. எஸ்.விஜயகுமார், த/பெ. சாமிக்கண்ணு
17. பி.பாலா, த/பெ. பாபு
18. கே.பாலமுருகன், த/பெ. கண்ணன்
19. ஏ.தமிழ்ச்செல்வன், த/பெ. ஆறுமுகம்
20. எஸ்.முருகன், த/பெ. சிவலிங்கம்
21. கே.மணிபாலன், த/பெ. கலியமூர்த்தி
22. எஸ்.மோகன், த/பெ. செல்வராசு
23. பி.கோவர்த்தனன், த/பெ. பழனி
24. எஸ்.சதிஷ், த/பெ. சாமசிவம்
25. ஜே.பிரகாஷ், த/பெ. ஜோதி
26. கே.அபினேஷ், த/பெ. கோட்டேஷ்
27. எம்.முருகன், த/பெ. மதியழகன்
28. ஏ.யுவராஜ், த/பெ. அரிகிருஷ்ணன்
29. எம்.அம்பிகா, த/பெ. முனியன்
30. வி.விசுவநாதன், த/பெ. வீரப்பன்
31. என்.லட்சுமணன், த/பெ. நாவம்மாள்
32. ஏ.புஷ்பராஜ், த/பெ. அர்ஜூனன்
33. கே.ரஞ்சிதா, த/பெ. கங்காதுரை
34. கே.வாசுதேவன், த/பெ. கலியப்பன்
35. வி.பிரபாகரன், த/பெ. வீரசாமி
36.எல்.பிரசன்னகுமார், த/பெ.இலட்சுமணன்
37. வி.துர்கா, த/பெ. வீரப்பன்
38. ஏ.மணிகண்டன், த/பெ. அழகநாதன்
39. இ.அஜய், த/பெ. ஏழுமலை
40. ஆர்.கிருஷ்ணமூர்த்தி, த/பெ. ராசு
41. கே.நடராஜ், த/பெ. கணேசன்
42. எஸ்.சரண்ராஜ், த/பெ. சரவணன்
43. வி.தேவன், த/பெ. வீரப்பன்
44. எம்.திரிஷா, த/பெ. மன்னார்சாமி
45. பி.மகாதேவன், த/பெ. பாலமுருகன்
46. வி.சந்தோஷ், த/பெ. வீரசண்முகம்
47. எம்.ஏழுமலை, த/பெ. முருகேசன்
48. கே.சங்கீதா, த/பெ. கார்த்தி
49. எஸ்.தஷ்ணாமூர்த்தி, த/பெ. சிட்டிகான்
50. டி.அஸ்விதா, த/பெ. திருமால்
51. எம்.இலக்கியா, த/பெ. மணிகண்டன்
52. பி.நேதாஜி, த/பெ. பெரியசாமி
53. கே.கார்த்தி, த/பெ. கலியமூர்த்தி
54. கே.முருகன், த/பெ. கண்ணன்
55. சுபாஷ், த/பெ. மாயவன்
56. எஸ்.சதீஷ், த/பெ. சீணு
57. ஒய்.சுனில், த/பெ. யாசகம்
58. எஸ்.தென்றல், த/பெ. சிவக்குமார்
59. என்.குப்பன், த/பெ. நடராஜன்
60. எஸ்.அரிகரன், த/பெ. சேகர்
61. கே.தஷ்ணாமூர்த்தி, த/பெ. கலியப்பன்
62. கே.இளையராஜா, த/பெ. கலியப்பன்
63. கே.ராஜா, த/பெ. கனகசபாபதி
64. ஆர்.வசந்த், த/பெ. ராஜி
65. ஆர்.சிவக்குமார், த/பெ. ராஜன்
66. ஏ.காயத்ரி, த/பெ. அண்ணாமலை
67. எஸ்.சுந்தரமூர்த்தி, த/பெ. சுப்பரமணி
68. பி.ரிஷிபாலன், த/பெ. பாபு
69. அய்.சிவாஜி, த/பெ. அய்யப்பன்
70. ஆர்.மணிமாறன், த/பெ. ராஜேந்திரன்
71. உபேந்திரன், த/பெ. சுப்பரமணி
72. ஆண்டவன், த/பெ. ஏழுமலை
73. ராஜாமணி, த/பெ. காசிநாதன்
74. ராஜேஷ், த/பெ. உத்திரன்
75. வினோத், த/பெ. மும்மூர்த்தி
76. சிறீதர், த/பெ. கலியமூர்த்தி
77. அறிவழகன், த/பெ. அண்ணாமலை
78. விசுவநாதன், த/பெ. ராமு
79. தில்லைகொழுந்து, த/பெ. கலியப்பன்
80. அம்பேத்கர், த/பெ. ஆனந்தன்
81.. ஜெயநிலவன், த/பெ. ஜெகன்
82. சசிரேகா, த/பெ. சக்கரவர்த்தி
83. காவியராஜன், த/பெ. சென்னன்
84. தர்ஷ்னி, த/பெ. விஜியகுமார்
85. ஆதிசங்கர், த/பெ. ஏழுமலை
86. ஜெயபிரதா, த/பெ. எட்டியான்
87. முத்து, த/பெ. சின்னத்தம்பி
88. சுரியா, த/பெ. பன்னீர்செல்வம்
89. மக்கள்செல்வம், த/பெ. சதாசிவம்
90. விக்னேஷ், த/பெ. மாணிக்கம்
91. நாகராஜ், த/பெ. ரவுடி முத்தம்மாள்
92. சீதா, த/பெ. வடமலை
93. செல்லப்பன், த/பெ. முருகையன்
94. கவுதம், த/பெ. இளவரசன்
95. தணிகவேல், த/பெ. குணசேகர்
96. இன்பத்தமிழன், த/பெ. மாசிலாமணி
97. தயாநிதி, த/பெ. ராமசாமி
98. வெங்கடேசன், த/பெ. சக்திவேல்
99. நவீன், த/பெ. சரவணன்
100. மருதுபாண்டி, த/பெ. முருகன்
101. மதன்ராஜ், த/பெ. ஏழுமலை
102. கலைவாணி, த/பெ. சங்கர்
103. ஜானகிராமன், த/பெ. கண்ணன்
104. கவியரசன், த/பெ. நாகராஜ்
105. பழனிவேல், த/பெ. உத்திரன்
106. முரளி, த/பெ. ராமச்சந்திரன்
107. செந்தில், த/பெ. அண்ணாதுரை
108. துர்கா, த/பெ. சாரங்கபாணி
109. சுடர்வேல், த/பெ. கதிர்வேல்
110. பாரதிராஜா, த/பெ. கலியப்பன்
111. முரளி, த/பெ. வீராசாமி
112. விஜய், த/பெ. சங்கர்
113. குமரவேல், த/பெ. குண்டு
ஆரியூர் வாழ் அரும் குடிகளுக்கு ஆயிரம் ஆயிரம் வணக்கமும், நன்றி மணக்கும் வண்ணப் பூக்களும் உரித்தாகட்டும்! உரித்தாகட்டும்!!
No comments:
Post a Comment