பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் மாற்றத்திற்கான மாரத்தான் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் மாற்றத்திற்கான மாரத்தான் போட்டி

இன்று (10.7.2022) தஞ்சை மாவட்டம் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச  தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாற்றத்திற்கான மாரத்தான் போட்டியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 21.1 கி.மீ. தூரப் போட்டியில் பங்கேற்று, தமது 136 ஆவது மாரத்தானை நிறைவு செய்தார். பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் அவர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். இம் மாரத்தான் போட்டியில் 5 கி.மீ.. தூரத்தை 45 நிமிடங்களில் கடந்த 4  வயது சிறுவன்   அகமகிழ்நன் அவர்களை  பாராட்டி ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை கலைஞர் நினைவு பன்னாட்டு மாராத்தான் சார்பாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, அரசு உயரதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment