போக்குவரத்துத்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைவில் முடிவுறும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

போக்குவரத்துத்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைவில் முடிவுறும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

சென்னை, ஜூலை 12  போக்குவரத்து ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மய்யத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று (11.7.2022) நடைபெற்றது.

இதில் மு.சண்முகம் எம்.பி.,கி.நடராசன் (தொமுச), அ.சவுந்தர ராசன், கே‌.ஆறுமுக நயினார் (சிஅய் டியு) உட்பட 66 தொழிற்சங்கங்களின் தலைவர்களும், போக்குவரத்து முதன்மைச் செயலாளர் முனைவர் கே.கோபால், நிதித்துறை இணைச் செயலாளர் அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் மற்றும் 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து 4 மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

14ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் களுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப் படும் ஊதிய விகித வித்தியாசங்களை எல்லாம் கணக்கீடு செய்து அதை சரி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

இதை முதலமைச்சர் கவனத் துக்கு எடுத்து சென்று, அதற் கான முடிவுகள் அறிவிக்கப்படும். விரை வில் தொழிற்சங்கங்கள் உட னான பேச்சுவார்த்தைகளை முடிக்க ஆவலாக உள்ளோம். அடுத்த பேச்சுவார்த்தை விரைவில் வர உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சூரியமூர்த்தி கூறும்போது,  அரசு போக்குவரத்து துறை எந்த சூழ்நிலையிலும் தனியார் மயம் ஆக்கப்படாது என அமைச்சர் கூறியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் எம்.பி. பேசும்போது, “கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக் கைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை என்றால் கூட்டுக் குழு சார்பில் முதலமைச்சரை சந்திக்க உள்ளோம்” என்றார்.

பேச்சுவார்த்தை குறித்து அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், 

‘‘நமது தரப்பின் நியாயங்களை வலுவாக முன் வைத்து, நமது நியாயங்களை முதலமைச்சரிடம் எடுத்துச்சென்று, நிதிநிலையைக் கணக்கில் கொள்ளாமல் நியாய மான ஒப்பந்தத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment