ஜிஎஸ்டி வரி உயர்வால் ஆவின் பொருள்களின் விலையேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

ஜிஎஸ்டி வரி உயர்வால் ஆவின் பொருள்களின் விலையேற்றம்

சென்னை, ஜூலை 22 ஜிஎஸ்டி வரிவிதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆவின் பால் தவிர்த்து,இதர நெய், தயிர் உள்ளிட்ட உபபொருட்களின் விலை உயர்த்தப்பட் டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 47 ஆவது கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவு கள் படி, பல்வேறு பொருட்களுக்கு வரி உயர்த்தப் பட்டுள்ளது.

அந்த வகையில், ஆவின் நிறுவனம் ஜிஎஸ்டி உயர்வைக் காரணம் காட்டி, பால் தவிர்த்து நெய் உள்ளிட்ட உப பொருட் களின் விலையை கணிசமாக உயர்த்தி யுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள் ளது.

அதன்படி, தயிர் 100 கிராம் ரூ.10-லிருந்து 12-ஆகவும், 200 கிராம் ரூ.25-லிருந்து 28-ஆகவும், 500 மிலி பாக்கெட் தயிர் ரூ.30-லிருந்து ரூ.35-ஆகவும், 200 மிலி ரூ.15-லிருந்து ரூ.18-ஆகவும், பிரீமியம் தயிர் 400 கிராம் ரூ.40-லிருந்து ரூ.50-ஆகவும், ஒரு கிலோரூ.100-லிருந்து ரூ.120-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

புரோபயாடிக் லஸ்சி 200 மிலிரூ.27- லிருந்து ரூ.30-ஆகவும், மேங் கோ மற்றும் சாக் லேட் லஸ்சிரூ.23-லிருந்து ரூ.25-ஆகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மோர் ரூ.15-லி ருந்து ரூ.18-ஆகவும், மோர் பெட் பாட்டில் ரூ.10-லிருந்து ரூ.12-ஆக வும், பாக்கெட் மோர் ரூ.7-லிருந்து ரூ.8-ஆகவும் விலை உயர்த்தப்பட் டுள்ளது.

நெய்யைப் பொறுத்த வரை, ஒரு லிட்டர் ஜார் ரூ.535-லிருந்து ரூ.580- ஆகவும், 500 மிலி ரூ.275-லிருந்து ரூ.290-ஆகவும், 200 மிலி ரூ.120-லிருந்து ரூ.130-ஆகவும், 100 மிலி ரூ.65-லிருந்து ரூ.70-ஆகவும், 5 லிட்டர் ரூ.2,650-லிருந்து ரூ.2,900- ஆகவும், 15 கிலோ ரூ.8,680-லிருந்து ரூ.9,680-ஆகவும் விலை உயர்த் தப்பட் டுள்ளது. 

மேலும், அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்ட நெய் ஒரு லிட்டர் ரூ.530-லிருந்து ரூ.575-ஆகவும், 500 மிலி ரூ.270-லிருந்து ரூ.280-ஆகவும், பிரீமியம் நெய் ஒரு லிட்டர் டின் ரூ.585-லிருந்து ரூ.630-ஆகவும், 500 மிலி ரூ.320-லிருந்து ரூ.340-ஆகவும், நெய் பாக்கெட் 100 மிலி ரூ.60-லிருந்து ரூ.65-ஆகவும், 15 மிலி ரூ.10-லிருந்து ரூ.12-ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

இந்த விலை உயர்வு நேற்று (21.7.2022) காலை முதல் அமலுக்கு வந்த நிலையில், ஆவின் பாலகங்கள் கடை களுக்கு புதிய விலைப் பட் டியல் அனுப்பப் பட்டுள்ளது. 

இரு தினங்களில் மற்ற கடை களுக்கும் புதிய விலைப் பட்டியல் அனுப்பிவைக்கப் படும் என்று ஆவின் நிறுவன அலுவலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment