மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 7-- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 3.7.2022 ஞாயிறு காலை 11 மணியள வில் மயிலாடுதுறை கூறை நாடு, மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேக ரன் தலைமையில் நடை பெற்றது.

மாவட்ட அமைப்பா ளர் ஞான.வள்ளுவன், துணைத்தலைவர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி, துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கி.தளபதி ராஜ் அனைவரையும் வர வேற்று கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத் தினை விளக்கினார்.

இந்நிகழ்வில் மயிலா டுதுறை நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், சீர்காழி நகர தலைவர் க.சபாபதி, குத்தாலம் நகர தலைவர் சா.ஜெகதீசன், மயிலாடு துறை ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி. இளங்கோவன், குத்தாலம்  ஒன்றிய துணைச்செயலாளர் தி.சபாபதி, சீர்காழி ஒன் றிய செயலாளர் கடவா சல் செல்வம், கொள்ளி டம் ஒன்றிய தலைவர் பி.ஆர்.பாண்டியன், செய லாளர் பூ.பாண்டுரங்கன், கு.தட்சிணாமூர்த்தி, நெப்போலியன், த.நாக ராஜன், இளைஞரணி ஜான்ஸன், பகுத்தறிவா ளர் கழக தோழர்கள் தங்க.செல்வராஜ், ஜீவன் ராஜ் மற்றும் கழக தோழர் கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்:

1. மதுரையில் நடை பெற்ற மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத் தின்படி மாநில அள விலான 60,000 விடுதலை சந்தா சேகரிப்பில் மயி லாடுதுறை மாவட்டத் திற்குரிய பங்கினை சிறப் பாக செய்து முடிப்பது.

2. ஜூலை 30 அரிய லூரில் நடைபெற உள்ள திராவிடர் கழக இளை ஞரணி மாநில மாநாட் டில் பெருந்திறளாக கலந்துகொள்வது கிய தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.

மயிலாடுதுறை நகர செயலாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் பூ.சி. காமராஜ் செயல்படுவார் என மாவட்ட கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட் டது. நகர செயலாளராக பொறுப்பேற்ற பூ.சி.காம ராஜ், மாவட்ட ஓய்வூதிய சங்க தலைவராக பொறுப் பேற்றுள்ள குத்தாலம் நகர திராவிடர் கழக தலைவர் சா.ஜெகதீசன், 50வது ஆண்டு திருமண நாளை ஒட்டி சீர்காழி நகர தலைவர் க.சபாபதி ஆகியோருக்கு மாவட் டத் தலைவர் ஆ.ச.குண சேகரன் சால்வை அணி வித்து சிறப்பு செய்தார். நகர செயலாளர் பூ.சி. காமராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment