அலைபேசி கோபுரங்களுக்கு வாடகை பெறுவோரிடம் இனி புதிய முறையில் சொத்து வரி வசூல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

அலைபேசி கோபுரங்களுக்கு வாடகை பெறுவோரிடம் இனி புதிய முறையில் சொத்து வரி வசூல்

சென்னை, ஜூலை 8 சென்னையில் 3,000 அலைபேசி கோபுரங்களுக்கான வாடகை பெறுவோருக்கு புதிய முறையில் சொத்து வரி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநக ராட்சி தனது சொந்த வருவாயை உயர்த்த இந்த முடிவை எடுத் துள்ளது.

நகர்புறங்களில் பெரும்பாலும் வீடுகளின் மாடியில்தான் அலைபேசி கோபுரங்கள் இருக்கும். இந்த கோபுரங்களை நிறுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்த வேண்டும். இப்படி அலைபேசி கோபுரங்களுக்கு தங்களின் இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் சென்னை மாநக ராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும்.

அந்த வகையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 3,000 அலைபேசி கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களுக்கு சென்னை மாநகராட்சி மாநக ராட்சியின் பழைய வரிவிதிப்பு முறையின்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட்டு வந்தது.

ஆதாவது, அனைத்து அலைபேசி கோபுரங்களுக்கும் அரையாண்டுக்கு ரூ.15,000 சொத்து வரி விதிக்கப்பட்டு வந்தது. இதன்படி, அலைபேசி கோபுரங்கள் வைக்க அனுமதி அளித்தவர்கள் சென்னை மாநக ராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30,000 செலுத்த வேண்டும்.

இந்த நடைமுறையை மாற்றி புதிய முறையில் அலைபேசி கோபு ரங்களுக்கு வரி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வருவாய் துறை அதி காரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் அலைபேசி கோபு ரங்களுக்கான வாடகை ஒரு இடத்தில் குறைவாகவும், ஒரு இடத் தில் அதிகமாகவும் இருக்கும். அனைவருக்கும் ஒரே தொகையாக அல்லாமல் இனி உரிமையாளர்கள் அலைபேசி கோபுரங்களுக்காக பெறும் வாடகையில் ஒரு குறிப் பிட்ட சதவீதத்தை சொத்து வரியாக வசூலிப்பது என முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

விரைவில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டு அனைவருக் கும் புதிய சொத்து வரி தாக்கீது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அக்டோபர் மாதத்திற்குள் புதிய சொத்து வரியை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


No comments:

Post a Comment