நாடாளுமன்ற உறுப்பினர்களா? வெறும் பார்வையாளர்களா? மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே. பாலகிருஷ்ணன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களா? வெறும் பார்வையாளர்களா? மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே. பாலகிருஷ்ணன்

கோவை  ஜூலை 27 நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பேசக்கூடாது என்ப தற்காகவே வார்த்தை களுக்கு தடை விதித்திருக்கிறது மோடி அரசு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டும் என பாஜக  நினைக்கிறது என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம்24.7.2022 அன்று  நடைபெற்றது. பேரவை கூட்டத்தை துவக்கிவைத்து கே.பால கிருஷ்ணன் பேசியதாவது: மோடி தலைமையிலான பாஜக அரசு வரலாறு காணாத பண வீக்கத்தை, பொருளாதார நெருக் கடியை சந்தித்து வருகிறது. இதனை சுட்டிக்  காட்டினால் உலக நாடுகள்  இப்படித்தான் நெருக்கடியை சந் தித்து வருவதாக தனது தோல்வியை மறைக்க  அடுத்த நாட்டை அடை யா ளம் காட்டுகிறார்கள்

பணவீக்கம் உண்மையில் 

8 சதவிகிதம் என்று  சொன்னாலும், உண்மையில் சில்லரை வணிகத் தோடு ஒப்பிட்டு பார்த்தால் 

10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்கிற நிலை  உள்ளது. வெளிநாட்டு செலாவணி இருப்பு படிப்படியாக குறைந்து கொண்டே போகிறது. இதுபோன்ற ஒரு நிலை தான் இலங்கையில் ஏற்பட்டது.  அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததன் காரண மாகத்தான் அந்நாடு டாலரில் வாங்க வேண்டிய பெட்ரோலியப் பொருட்கள், எரி பொருட்கள் உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்க ளாக அங்கு மக்கள் பெரும்  போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். 

இதுபோன்ற ஒரு நெருக்கடியை இந்திய நாடும் சந் தித்து வருகிறது. டாலர் கையிருப்பு படிப்படியாக தேய்ந்து கொண்டே இருக்கிறது. மறுபுறம் வேலையின்மை 9 சத விகிதமாக அதிகரித்துள் ளது. விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு பதிலாக மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டிச்சுருக்கு கிறது. கிராமப்புற வேலை வாய்ப்பு உறு தித்திட்டம் உள்ளிட்ட திட் டங்களுக்கான நிதியை குறைக்கிறது. இலவசம் தேவையில்லை என பிர தமர்  மோடி பேசுகிறார். மாநில  அரசுகள் வழங்கும் மானியங்கள், நிவாரணங்களைக்கூட ஒன்றிய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்து கிறது. நாட்டை காப்பாற்ற முடி யுமா என்கிற அய்யம் எழுந்துள்ளது. 

நாட்டை பின்னோக்கி இழுக் கிற வேலையை பாஜக அரசு செய் கிறது. ஆனால் அம்பானி, அதானி சொத் துக்களின் மதிப்புகள் மட்டும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த நெருக்  கடி குறித்து பேச அனுமதிப்ப தில்லை. ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எந்தந்த வார்த் தைகளை பேசக்கூடாது என்கிற பட்டியல் போடுகிறார்கள். இந்த பட்டியலை பார்த்தால் நாடாளு மன்ற உறுப்பினர்கள் மோடி ஆட்சியில்  வெறும் பார்வை யாளர்களாகவே இருக்க முடியும். நெருக் கடியில் உழல்கிற மக்களின் மனங்கள் எரிமலையாய் கொதிப் பதை அறிய முடிகிறது. இதனை திசைதிருப் பத்தான் பிரித்தாளும் சூழ்ச்சி யை திட்டமிட்டு பாஜக செய லாக்க முனைகிறது. நாட்டில் எப்போதும் மதக்கலவர சூழல் இருந்து கொண்டே இருப்பதுதான் தனக்கு ஆதா யம் என்று பாஜக நினைக்கி றது. இத்தகைய நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்க  மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழி யும் இயக்கங்களை வெற்றி கரமாக் கிடவும், அதில் வெகு மக்கள் திர ளாக பங்கேற்க வைப்பதிலும் கட் சியின் ஊழியர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment