சென்னை, ஜூலை 30 சென்னை செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு ‘தம்பி’ என்ற பெயர் வைத்தற்கான காரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி
யுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னத்திற்கு ‘தம்பி’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரிட்டார். வெள்ளை வேட்டி, சட்டை போட்ட இந்த ‘தம்பி’ மூலம் செஸ் ஒலிம்பியாட் தொடரை நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது தமிழ்நாடு அரசு.
இந்நிலையில், சதுரங்க ஒலிம்பியாட் சின்னத்திற்கு ‘தம்பி’ என்ற பெயர் வைத்ததற்கான காரணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
இது குறித்து சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பேசிய அவர், "அறிஞர் அண்ணா அனைவரையும் தம்பி என்றே அழைப்பார். எனவேதான் செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு தம்பி என்ற பெயர் வைத்தேன்" என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment