தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான செலவின கட்டுப்பாடுகள் தளர்வு: அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான செலவின கட்டுப்பாடுகள் தளர்வு: அரசாணை வெளியீடு

சென்னை, ஜூலை 10  கரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கான விடுப்புடன் கூடிய பயண சலுகை, அலுவலக செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கு விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப் பதாவது: கரோனா தொற்று காலமான 2020-_2021 மற்றும் 2021-_2022 ஆண்டு களில் மாநிலத்தின் செலவுகளை கட் டுப்படுத்துவதற்காக அரசு சில நட வடிக்கைகளை எடுத்தது. அதன் அடிப் படையில் 2020_-2021ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட சில ஒதுக்கீடுகள் நிறுத்தப்பட்டன.  

மாநிலத்திற்கு ஒன்றிய அரசிட மிருந்து வர வேண்டிய ஜிஎஸ்டி தொகை வராத நிலையிலும், மாநி லத்தின் நிதிநிலை தொடர்ந்து சிக்கலில் உள்ள நிலையிலும் நிர்வாக நலன் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட அரசாணையில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, அலுவ லகங்களுக்கான தற்செயல் செலவுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படு கிறது. அலுவலகங்களுக்கு மரச்சா மான்கள் வாங்குவதற்கான கட்டுப் பாடுகளில் பழைய நிலையே தொடர வேண்டும். விளம்பரம் மற்றும் பொருட் காட்சிகளுக்கான செலவினங்கள் உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப் படுகிறது. தங்கும்வசதி, உணவு  மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான செலவினங் களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப் படுகிறது. இயந்திரங்கள் வாங்குவதில் ஏற்கெனவே இருந்த நிலை தொடரப் பட வேண்டும்.புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப் படுகிறது. பழைய வாகனங்களை மாற்றம் செய்யலாம். பயிற்சிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. அச்சுப் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

பயண செலவு மற்றும் தின படி களுக்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப் படுகிறது. தவிர்க்க முடியாத பயணங் களுக்கான செலவு மட்டும் அனுமதிக் கப்படுகிறது. அதிகாரிகள் மாநிலங் களுக்குள் விமானத்தில் சிக்கன வகுப் பில் செல்லலாம்.வெளி மாநிலங்களுக்கு அதிகாரிகள் விமானங்களில் செல்வ தற்கான செலவினங்களுக்கு விதிக்கப் பட்ட கட்டுப்பாடு தொடர்கிறது. பயணப்படி 25 சதவிகிதம் குறைக்கப் பட்டது ரத்து செய்யப்படுகிறது. பணியிட மாற்றத்திற்கான செலவினம் குறைக்கப்பட்டது தொடர்கிறது. விடுப்புடன் கூடிய பயண சலுகை மீண்டும் வழங்கப்படுகிறது. 

நிகழ்ச்சிகளில் பரிசுப் பொருட்கள், சால்வைகள், நினைவு பரிசுகள் கொடுப்பது, மாநாடுகள் நடத்துவது, அலுவலக ரீதியான நிகழ்ச்சிகளில் மதிய உணவு, இரவு உணவு ஆகியவற் றுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப் படுகின்றன. இந்த செலவினங்களை இந்த நிதியாண்டு முதல் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment