தெரியுமா உங்களுக்கு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

தெரியுமா உங்களுக்கு?

 முதல் விண்வெளி பெண்

உலகின் முதன்முதலில், குறைந்த வயதில் விண்வெளி சென்றவர் ரஷ்ய விண்வெளி வீராங்கனை வேலன்டினா டிரிஸ்கோவா, 1937இல் பிறந்த இவர் 26 வயதில் 1963 ஜூன் 16இல் வோஸ்டாக் விண்கலம் மூலம் தனி ஒருவராக விண்வெளிக்கு சென்றார். விண்வெளியில் 48 முறை பூமியை சுற்றி வந்தார். மூன்று நாள் விண்வெளியில் தங்கியிருந்தார். 

பொறியியல் முடித்த இவர் துவக்கத்தில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றினார். பின் ரஷ்ய விமானப்படையில் சேர்ந்தார். விண்வெளி பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

அறிவியலில் பெண்கள்

அறிவியலில் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வலியுறுத்தி அய்.நா., சார்பில் பிப்.11இல் அறிவியலில் பெண், பெண் குழந்தைகளுக்கான பன்னாட்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

பன்னாட்டு அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட வளர்ச்சி இலக்கை அடைவதற்கு அறிவியல், பாலின சமத்துவம் இரண்டும் முக்கியமானவை. 

கடந்த சில ஆண்டுகளாக பெண்களை அறிவியல் துறையில் ஊக்குவிப்பதிலும் ஈடுபடுத்துவதிலும் பன்னாட்டு சமூகம் நிறைய முயற்சி எடுத்தாலும், இன்னும் அறிவியலில் முழுமையாக பங்கேற்பதில் இருந்து பெண்கள் விலகியே உள்ளனர்.


No comments:

Post a Comment