பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு...

‘பெரியார் 1000' தேர்வுக்கு ஒவ்வொரு ஒன்றியத் திலும் உள்ள நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை கணக்கெடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் அல்லது இரு பள்ளிகளுக்கு ஒரு தோழரை பள்ளிகளுக்கிடையே உள்ள தூரத்தைப்பொறுத்து பொறுப்பாக்கி, விவரத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒத்த கருத்துடையோரையும் இதில் இணைத்துகொள்ளலாம்.

தொடர்ந்து தலைமையிலிருந்து அறிவிப்பு வந்தவுடன் துரிதமாக நடவடிக்கை எடுத்து, செயல்பட ஏதுவாக இருக்கும்படி அனைத்து பகுத்தறிவாளர் கழகத் தோழர்களை கேட்டுக்கொள்கிறோம்.

மாநிலத் துணைத்த லைவர்கள், மாவட்ட செயலா ளர்கள், மாவட்ட தலைவர்கள் தங்களது பொறுப்பு மாவட்டத்தில் உள்ள ஒத்த கருத்துடையோரையும் இதில் இணைத்து செயல்படத்தக்க வகையில் ஒன்றிய பொறுப்பாளர்களை ஒருங்கிணைக்க வேண்டுகிறோம்.

விவரத்தை பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் 9840606428 அவர் களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்..

- இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்

- வி.மோகன், பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment