நன்னன்குடி நடத்தும் நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா புலவர் மா.நன்னன் அவர்களின் நூறாண்டு தொடக்க விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

நன்னன்குடி நடத்தும் நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா புலவர் மா.நன்னன் அவர்களின் நூறாண்டு தொடக்க விழா

சென்னை, ஜூலை 29- நன்னன் குடி நடத்தும் நூல் வெளி யீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா -19, நினைவில் வாழும் புலவர் மா.நன்னன் அவர் களின் நூறாண்டு தொடக்க விழா 30.7.2022 அன்று காலை 10.30 மணிக்கு திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங் கம் (முத்தமிழ்ப் பேரவை) சென்னை இராசா அண்ணாமலைபுரத்தில் நடைபெறுகிறது.

இவ்விழாவிற்கு தமிழ்நாடு அரசின் மருத் துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் அவர்கள் தலைமையேற்று பரிசளித்து தலைமைப் பேருரை நிகழ்த்துகிறார்.

ஏகம் பதிப்பகத்தின் வெளியீடுகள் ‘தீதும் நன் றும் பிறர்தரவாரா,‘ என் னும் சிறுகதைப் போட்டி யில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு, இவர் தாம் பெரியார் (வர லாறு) போராட்டங்கள், எழிலினி பதிப்பகத்தின் வெளியீடுகள் பெரியா ரியல் 1.பொருள், 2.மொழி, 3.இலக்கியம், 4.கலை, 5.தாம் ஆகிய நூல்களை வெளியிட்டு தமிழ் நாட்டு அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழுத் தலைவராகிய பேராசிரியர் சுப.வீர பாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

கலைஞர் தொலைக் காட்சியின் நிர்வாக இயக் குநர் அமிர்தம் அவர்கள் நூல்களைப் பெற்றுக் கொள்கிறார். 

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரி யர் ப.திருமாவேலன் மற் றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய உறுப்பினர் பேராசிரியர் தமிழ் இயலன், எழிலினி பதிப் பக உரிமையாளர் கோ.ஒளிவண்ணன் ஆகி யோர் நூல் திறவுரை யாற்றுகிறார்கள்.

No comments:

Post a Comment