நவீன டிஜிட்டல் திரையில் மாமல்லபுர சிறப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

நவீன டிஜிட்டல் திரையில் மாமல்லபுர சிறப்புகள்

புதுடில்லி, ஜூலை 10 பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட் டியை முன்னிட்டு மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர் களுக்காக பல்லவ மன் னர்களின் வரலாறு, குடவரை சிற்பங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை டிஜிட்டல் திரை அமைத்து ஒளிபரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது.

கடந்த 2019-இல் கடற்கரை கோயில் வளாகத்தில் நவீன டிஜிட்டல் திரை அமைத்து பல்லவ மன் னர்கள் மற்றும் குடவரை சிற்பங்களின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து தொல்லியல் துறை ஒளிபரப்பு செய்தது. 

ஆனால் இது நீடிக்கவில்லை. நிர்வாக கார ணங்களுக்காகவும் அடுத்து வந்த கரோனா தொற்று சூழ்நிலையாலும் டிஜிட்டல் திரை அகற்றப் பட்டது.

இந்நிலையில், பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்ல புரத்தில் நடக்கவுள்ள நிலையில், முக்கிய இடங்களில் மீண்டும் டிஜிட் டல் திரை அமைத்து மாமல்லபுரத்தின் சிறப்புகளை ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment