மதஅடிப்படையிலான வெறுப்புப் பிரச்சாரங்கள் - இந்தியாவின் தற்போதைய சூழல் அச்சம் தருகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

மதஅடிப்படையிலான வெறுப்புப் பிரச்சாரங்கள் - இந்தியாவின் தற்போதைய சூழல் அச்சம் தருகிறது!

பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் எச்சரிக்கை

புதுடில்லி, ஜூலை 3- மத அடிப்படையிலான நுபுர் சர்மா போன்  றோரின் வெறுப்புப் பிரச்சாரங்கள், அதை யொட்டிய வன்முறைச் சம்பவங்கள் அதிக ரித்து வரும் நிலையில், “இந்திய நாட்டின் தற்  போதைய சூழல் அச்சம் தருவதாக உள்ளது” என்று அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். 

“இந்தச் சூழலில், இந்துக்களும், முஸ்லிம்களும் நீண்டகாலமாக கடைப்பிடித்துவரும் சகிப்புத்தன்மை கொண்ட உள்ளார்ந்த கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; ஒற்றுமையாக இணைந்து பணி யாற்ற வேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

நோபல் பரிசு பெற்றவரும், உலகின் மிகச் சிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவருமான அமர்த் தியா சென், கொல்கத்தாவின் சால்ட்  லேக் பகுதியில் தனது பெயரிலான ஒரு ஆராய்ச்சி மய்யத்தின் திறப்பு விழாவில் கலந்து  கொண்டு உரையாற்றினார். அப் போது இந்தியாவின் மதச் சார்பின்மை பாரம்பரியம் குறித்தும், அதற்கு தற் போதைய பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள அச் சுறுத்தல் குறித்தும் கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

பிளவு ஏற்படுத்தலாமா?

 அப்போது அவர் மேலும் பேசியிருப்பதாவது:

“நான் ஏதாவது பயப்படுகிறேனா என்று யாராவது என்னிடம் கேட்டால், நான் ‘ஆம்’ என்று கூறுவேன். இப்போது பயப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாட்டில் தற்போது நிலவும் சூழல் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வரலாற்று  ரீதியாக தாராளமாக - மக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் பிளவு ஏற்படுவதை நான் விரும்பவில்லை.  

இந்தியா இந்துக்களால் மட்டும் இருக்க முடியாது. அதேபோல மீண்டும் முஸ்லிம்களால் மட்டும் இந்தியாவை உருவாக்கி விடவும் முடியாது. இந்தியா வில் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு உள்ளார்ந்த கலாச்சாரம் உள்ளது. அந்த வகையில், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயல்படுவதே காலத்தின் தேவை. 

சகிப்புத் தன்மை சிதைக்கப்படலாமா?

யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் இந்தி யாவில் ‘யுக காலமாக’ இணைந்து வாழ்கி றார்கள் என்பது இந்தியாவின் சகிப்புத்தன்மை கலாச் சாரத்திற்கு உதாரணம். ஆனால், வழிபாட்டுத் தலங்களை மீட்கிறோம் என்ற பெயரி லான சமீபத்திய (பாபர் மசூதியை இடித்து விட்டோம்; அடுத்து வாரணாசி ஞானவாபி மசூ தியை இடிப்போம்; தாஜ் மஹால், குதூப்  மினார்களை தகர்ப்போம் என்பன போன்ற)  முயற்சிகளைப் பொறுத்தவரை, இந்துக்கள் ஒரு குழுவாக ‘தாஜ்மஹாலின் பெருமையைப் பெற்றுவிட முடியும்’ என்று நான் நினைக்க வில்லை.

 அடிக்கடி நிகழும் துண்டுதுண்டான ஆபத்து களை இந்திய நீதித்துறை கவனிக்கவில்லை. இது பயமாக இருக்கிறது. பாதுகாப்பான எதிர்  காலத்திற்கு, இந்தியாவில் நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் அதிகாரத்துவம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை இருக்க வேண்டும். மக்களைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ள காலனித்துவச் சட்டங்கள் இன்றும் பயன்படுத்தப்படுவது அசாதாரணமானது. இவ்வாறு அமர்த்தியா சென் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment