நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஜூலை 19 நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுதிய 1,42,286 மாணவ, மாணவியருக்கு சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை உதவி மய்யத்தின் மூலம் மனநல ஆலோ சகர்களை கொண்டு ஆலோசனை வழங்கும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (18.7.2022) தொடங்கி வைத் தார்.

இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய அவர்," 17.07.2022 அன்று நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 1,42,286 மாணவர்கள் தேர்வு எழு தினர். 

இது கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையான 1,10,971-அய் விட கூடுதலாக உள்ளது.

2020 ஆம் ஆண்டில் 1,17,000 மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய 12ஆம் வகுப்பு தேர்வினை முடித்து இந்த நீட் தேர்விற்காக தொடர்ந்து பயிற்சி யில் ஈடுபட்டு படித்து, தேர்வினை எழுதியிருக்கிறார்கள்.

இதில் குறிப்பாக அரசுப் பள்ளி களில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில், நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 

”மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்“  சார்பாக மனநல ஆலோ சனைகள் வழங்கப் படுவதற்கு, தேர்வு எழுதிய 17,567 மாணவர்களின் பட்டியல் பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்பட்டது.

நீட் தேர்வு எழுதிய மாணவர் களுக்கு குறிப்பாக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் இரண்டு மற்றும் அதற்கு மேல் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள், மனநல மருத்து வர்கள் மற்றும் மனநல ஆலோசகர் களால் மாணவர்கள் மற்றும் அவர் களது பெற்றோர்களுக்கு வழங்கப் படுகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி களில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் அரசால் வழங்கப்பட்டுள்ள 7.5% உள் ஒதுக்கீட்டில் கடந்த வருடம் 445 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப் பிற்கும், 110 பிடிஎஸ் மருத்துவப் படிப்பிற்கும் ஆக மொத்தம் 555 மாணவர்கள் பயனடைந்தார்கள்.

எனவே இவ்வாண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு தொடர்ந்து மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 

மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனநல ஆலோ சனைகள் தொடர்ந்து பெறுவதற்கு 104 என்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கட்டண மில்லா இலவச எண்ணை 

தொடர்பு கொள்ள கேட்டுக்கொள் ளலாம்" 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment