இளம் விஞ்ஞான ஆர்வலர்களின் புதுமை படைப்பாற்றல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

இளம் விஞ்ஞான ஆர்வலர்களின் புதுமை படைப்பாற்றல்

சென்னை, ஜூலை 13 பொறியியல் மாணவர்களுக்கான ஸ்டார் உச்சி மாநாடு என்னும் கருத்தரங்கம் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி நிகழ்வாகும். இது புதுமை மற்றும் படைப்பாற்றலில் கவனம் செலுத்தி, எதிர்கால பொறியியல் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்தக் கருத்தின்படி, சிமேட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன்முறையாக இது போன்ற ஒரு ஆராய்ச்சித் தளத்தை அறிமுகப்படுத்தியது. சவீதா டிரான்ஸ் டிசிப்ளினரி வருடாந்திர ஆராய்ச்சி உச்சி மாநாடு (ஸ்டார் உச்சி மாநாடு) இளம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் விரிவான ஆராய்ச்சி திட்டங்களை முன்வைப்பதற்கான ஒரு தளமாக உருவாகியுள்ளது. 

இந்த ஆண்டு, இறுதியாண்டு பொறியியல் மாணவர்கள், அவர்களின் அறிவியல் கண்ணோட்டம் குறித்த ஒரு பார்வையை விவரிக்கும் வகையில், அவர்களின் ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தினர்.

சிமேட்ஸ் நிறுவனர் முனைவர் என்.எம். வீரைய்யன்  முன்னிலையில் எச்.டி.சி குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குனர்  அருண் சீனிவாசன் அவர்கள் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார்.  

ஒரு வாரத்திற்கும் மேலாக, பட்டதாரிகளின் அயராத முயற்சியை பிரதிபலிக்கும் வகையில், நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு, கிட்டத்தட்ட தொண்ணூறு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டது  ஸ்டார் உச்சி மாநாட்டில் தோராயமாக 300 வெற்றியாளர்கள் விருதுகளைப் பெற்றனர். இளம் விஞ்ஞான ஆர்வலர்களின் கல்விக் கொண்டாட்ட நிகழ்வு, அடுத்த ஆண்டுக்கான ஒரு சிறப்பான நிகழ்வின் உறுதிமொழியுடன் நிறைவுற்றது. பொறியியலுக்குள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட துறையின் அறிவையும் புரிதலையும் விரிவுபடுத்தியதற்காக மாணவர்கள் தங்கள் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


No comments:

Post a Comment