Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
முப்பரிமாண கலை உருவங்களை உருவாக்கும் மோனாமி
July 26, 2022 • Viduthalai

ஒவ்வொரு சிற்பத்திற்கும் அதற்கு ஏற்றவாறு வடிவம் கொடுப்பதால், பார்ப்பதற்கு அசல் போலவே காட்சியளிக்கின்றன இவர் செய்யும் அட்டைப் பெட்டி சிற்பங்கள். கண்களைக் கவரும் இந்த சிற்பங்களை செய்ய அவர் பயன்படுத்திய பொருட்கள் பழைய அட்டைப் பெட்டி, கத்தரிக்கோல், பசை, டேப், அளவு கோல் ஆகியவை மட்டுமே. சிற்பங்கள் செதுக்குவது நுட்பமான கலை. களிமண், மரம், உலோகங்கள், மண், சாக்பீஸ் துண்டுகள் என பலவற்றையும் அழகிய சிற்பங்களாக மாற்றுவதை அறிந்திருப்போம். 

அந்த வரிசையில், தேவையில்லை என்று தூக்கி எறியும் அட்டைப் பெட்டியில் கூட முப்பரிமாண சிற்பங்களை செய்து அசத்தி வருகிறார், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மோனாமி. ஜப்பானில் உள்ள வகயாமா என்ற ஊரில் பிறந்த மோனாமி, ஒசக்காவில் உள்ள கலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். தனது கல்லூரியில் கொடுத்த   செயல் திட்டத்தை (புராஜெக்டை) செய்வதற்கு அவருக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கவலையுடன் வீட்டிற்கு திரும்பிய மோனாமி, வீட்டில் பழைய அட்டைப் பெட்டிகள் நிறைய இருப்பதைக் கண்டார். உடனே அவரது மனதில் ஒரு யோசனை தோன்றியது. 

அதன்படி அவற்றை கொண்டு சிற்பங்கள் செய்து, அதில் கிடைத்த வருமானத்தில் தனது கல்லூரி செயல் திட்டத்தை (புராஜெக்டை)முடித்தார். அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தி நுணுக்கமான வேலை கொண்ட கைக்கடிகாரங்கள், பள்ளி உடைகள், கார்ட்டூன் உருவங்கள், இசைக்கருவிகள், டிராகன், பர்கர் போன்ற உணவுப் பொருட்கள், ரோபோட், காலணிகள், மினியேச்சர் வாகனங்கள் என்று அவர் செய்யாத சிற்பங்களே இல்லை. 

"எளிமையான வேலை போல தோன்றினாலும், ஒரு உருவத்தை செய்வதற்கு பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, உன்னிப்பாக செயல்பட வேண்டும்" என்று கூறுகிறார்  மோனாமி. ஒவ்வொரு சிற்பத்திற்கும் அதற்கு ஏற்றவாறு வடிவம் கொடுப்பதால், பார்ப்பதற்கு அசல் போலவே காட்சியளிக்கின்றன இவர் செய்யும் அட்டைப் பெட்டி சிற்பங்கள். கண்களைக் கவரும் இந்த சிற்பங்களை செய்ய அவர் பயன்படுத்திய பொருட்கள் பழைய அட்டைப் பெட்டி, கத்தரிக்கோல், பசை, டேப், அளவு கோல் ஆகியவை மட்டுமே. மோனாமி, தான் வடிவமைத்த சிற்பங்களை தனக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் விற்பனை செய்வதோடு, அவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தும் வருகிறார். ''அட்டைப் பெட்டிகளைக் கொண்டு சிற்பங்களை செய்யும் பொழுது, எனக்குள்ளே ஒளிந்திருந்த சிற்பக் கலைஞரை உணர்ந்தேன். இந்த வேலையை என்னால் நிறுத்தவே முடியவில்லை'' என்று கூறுகிறார், மோனாமி. நிதி பற்றாக்குறையை சமாளிக்க ஆரம்பித்த வேலை, அவருக்குள் இருந்த தனித்தன்மையை வெளிக்கொண்டு வந்து சிற்பக் கலைஞராக மாற்றி இருக்கிறது.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn