கொறடா உத்தரவை மீறியதாக இரு அணியினர் புகார் 53 சிவசேனா சட்டமன்றஉறுப்பினர்களுக்கும் விளக்கம் கேட்டு அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

கொறடா உத்தரவை மீறியதாக இரு அணியினர் புகார் 53 சிவசேனா சட்டமன்றஉறுப்பினர்களுக்கும் விளக்கம் கேட்டு அறிக்கை

மும்பை, ஜூலை.11 மகாராட்டிரா வில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகித்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.   இந்தநிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உரு வாக்கினார். 

மேலும் அவர் பாரதியா ஜனதா ஆதரவுடன் கடந்த 30-ஆம் தேதி முதல மைச்சராக பொறுப்பேற்று கொண் டார். இதில் அவர் சட்ட சபையில் கடந்த 4-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபித்தார். அப்போது உத்தவ் தாக் கரே அணி கொறடா சுனில் பிரபு சிவசேனா சட்டமன்றஉறுப்பினர்களை ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறினார்.

 இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி கொறடா பாரத் கோகவாலே சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் களை அரசுக்கு ஆதரவாக வாக் களிக்குமாறு தெரிவித்தார். இதில் மொத்தம் உள்ள 55 சிவசேனா சட்ட மன்றஉறுப்பினர்களில், 40 அதிருப்தி சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவாகவும், 15 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி தரப்பில் கட்சியின் கொறாடாவாக நியமிக் கப்பட்ட பாரத் கோகவாலே அவரது உத்தரவைமீறி செயல்பட்ட உத்தவ் தாக்கரே ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்க்கள் 14 பேரை (ஆதித்ய தாக்கரே தவிர) தகுதி நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராகுல் நர்வேக் கரிடம் புகார் அளித்தார்.

இதேபோல உத்தவ் தாக்கரே வால் சிவசேனா கொறடாவாக நியமிக்கப் பட்ட சுனில் பிரபு ஏக்நாத் ஷிண் டேவுக்கு ஆதரவாக வாக்களித்த 39 சட்டமன்ற உறுப் பினர்கள் மீது தகுதி நீக்க நடவ டிக்கை எடுக்க புகார் அளித்தார். இருதரப்பினரும் அளித்த புகார் குறித்து சட்டசபை முதன்மைச் செயலாளர் ராஜேந்திர பாகவத் சிவசேனா 2 அணிகளையும் சேர்ந்த 53 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக் கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளார்.

 அதில் 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபை முதன்மைச் செய லாளரிட மிருந்து நோட்டீசு வந்து இருப்பதை 2 அணி சட்டமன்ற உறுப்பினர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். இதற் கிடையே தகுதி நீக்க விவகாரத்தில் அதிருப்தி அணியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment