40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!


ஊற்றங்கரையில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
ஊற்றங்கரை பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிறீராமன் ஒரு ஆண்டு சந்தா, ஊற்றங்கரை பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுமித்ரா தவமணி ஒரு ஆண்டு சந்தா, ஊற்றங்கரை பேரூராட்சி மன்ற உறுப்பினரும் இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான சிவன் ஒரு ஆண்டு சந்தா, ஊற்றங்கரை பேரூராட்சி மன்ற உறுப்பினர் குமரேசன் ஒரு ஆண்டு சந்தாவை, ஊற்றங்கரை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.குமரேசன் 10 ஆண்டு சந்தாவை, ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவர் பா.அமானுல்லா ஊற்றங்கரை பேரூராட்சி சார்பில் விடுதலை நாளிதழுக்கு 10 ஆண்டு சந்தாக்களை கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமனிடம் வழங்கினார்.

ஆவடி மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் ஆறு சந்தாக்களை ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் வழங்கினார். பகுத்தறிவாளர் டி.ஆர்.ஆர் செங்குட்டுவனிடம் பத்து சந்தா கேட்டு ஒரு விடுதலை சந்தா புத்தகம் கொடுக்கப்பட்டது. நெய்வேலி கனகசபாபதி ஒரு ஆண்டு சந்தா வழங்கினார். பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமியிடம் பத்து சந்தாவுக்கான ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டது. ஆவடி பருத்திப்பட்டு சவுந்திரராஜன் ஒரு ஆண்டு சந்தா வழங்கினார். மாவட்டச் செயலாளர் க.இளவரசன், துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் களப்பணியில் உடனிருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத் தில் மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன், செயலா ளர் கி.தளபதிராஜ், ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் கு.இளமாறன் ஆகியோர் ஜூலை 13, 14, 15 தேதிகளில் விடுதலை சந்தா சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் சா.முருகையன், துணைத்தலைவர்கள் மா.பாலசுநதரம், அ,முத்தை யன், கொக்கூர் க.கலைக்குமார், எஸ்.இராஜமாணிக் கம், ஆர்.சங்கர், கவிதா சின்னகுமார், கள்ளிக்காடு எம்.என்.இரவிச்சந்திரன், தேரிழந்தூர் எ.ஹஜ்ஜி முகம்மது, மாதிரிமங்கலம் எஸ்.மூர்த்தி, திருவாலங் காடு ஊ.ம.தலைவர் கே.சின்னையன், திருவாவடு துறை ஊ.ம.தலைவர் ஜே.அர்ஷிதாபானு சாதிக், தேரிழந்தூர் ஜெய்ஹிந்த் மெட்ரிக் பள்ளி தாளாளர், குத்தாலம் ராஜ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆர்.பாண்டியன், ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தாவிற்கான தொகையை அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தில் மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ் மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், ஆகியோர்  ஜூலை 18,19,20 தேதிகளில் விடுதலை சந்தா சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி. இளங்கோவன், மயிலாடுதுறை ஹனான் டிரேடர்ஸ், நிடூர் பி.ஏ-அப்துல் வதூத், எம்.ரஹ்மத் துலலா, எம். மஹபுப்அலி, ஹச்.எம்.முஹம்மது ரியாஸ், ஏ.மன் சூர் அலி, மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமன், பேராசிரியர் சு.தமிழ்வேள் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தாவிற்கான தொகையை அளித்தனர்.

தருமபுரி மாவட்டம் பி அக்ரஹாரம் கிளைத் தலைவர் ராமசாமி 10 சந்தாக்களுக்கான ஒரு ரசீது புத்தகத்தை மாவட்டத் தலைவர் வீ.சிவாஜியிடம் பெற்றுக் கொண்டார். மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் மா.ரஜினி 10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் ஆ.குணசேகரன், நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், பகுத்தறிவாளர் கழக தோழர் இரெ.செல்லதுரை ஆகியோர் உள்ளனர். மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதியிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஓய்வு) அமரவேல் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். தர்மபுரி பாப்பாரப்பட்டியில் தலைமை ஆசிரியர் அ ஜெயராமன் ஓராண்டுக்கான விடுதலை சந்தாவை தர்மபுரி மாவட்ட தலைவர் சிவாஜியிடம் வழங்கினார். இ.மாதன், க. சின்னராஜ், வினோபாஜ், க.ராமச்சந்திரன். கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர், கோட்டீஸ்வரன், 4ஆவது வார்டு உறுப்பினர், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி,செங்குன்றம் விடுதலை ஓராண்டு சந்தாவை கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தனிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment