திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்
முதல் தவணையாக 50 'விடுதலை' ஆண்டு சந்தா வழங்கினார்கள்
முதல் தவணையாக 50 'விடுதலை' ஆண்டு சந்தா வழங்கினார்கள்
தமிழர் தலைவர் அவர்களின் 60 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் பணிக்கு நன்றி காட்டிடும் வகையில் 60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணியில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 16-07-2022 அன்று மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி தலைமையில் மாவட்ட அமைப்பாளர் வீ.சிவசாமி, மாநகர செயலாளர் கருணாகரன், மைனர் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முதல் தவணையாக 50 விடுதலை ஆண்டு சந்தா கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் 'விடுதலை' சந்தா சேர்க்கும் பணி
திருப்பூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி தலைமையில் மாநகர செயலாளர் கருணாகரன், மைனர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சந்தா சேர்க்கும் பணியின்போது, திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் 5 ஆண்டு சந்தா, தனது பங்காக வழங்கினார். விடுதலை சந்தாக்களுக்கான ரசீது புத்தகங்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் பெற்றுக் கொண்டு 100 சந்தாக்கள் திரட்டி வழங்குவதாக உறுதியளித்தார். திருப்பூர் சட்டமற்ற உறுப்பினர், தி.மு.க மாவட்டசெயலாளர் க.செல்வராசு விடுதலை சந்தாக்களுக்கான ரசீது புத்தகங்களை பெற்றுக் கொண்டு 100 சந்தாக்கள் திரட்டி வழங்குவதாக உறுதியளித்தார். ஜூலை.30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு நன்கொடையும் திருப்பூர் நா.ஈஸ்வரமூர்த்தி திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ். ஆறுச்சாமி, மாநகர செயலாளர் கருணாகரன், மைனர் ஆகியோரிடம் விடுதலை சந்தா 1 ஆண்டு வழங்கினார். திருப்பூர் மாநகரஅமைப்பாளர் ஆசிரியர் முத்தையா விடுதலை 1 ஆண்டு சந்தாவை வழங்கினார். திருப்பூர் ஆசிரியர் மு.துரைசாமி விடுதலை 5ஆண்டு சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். திருப்பூர் தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் சி.கவிக்குமார், சிவக்குமார் ஆகியோர் திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, மாவட்ட அமைப்பாளர் வீ.சிவசாமி மாநகர செயலாளர் கருணாகரன், மைனர் ஆகியோரிடம் விடுதலை சந்தா வழங்கினர் (16-07-2022).
தர்மபுரி மாவட்டத்தில் 'விடுதலை' சந்தா சேர்க்கும் பணி
தருமபுரி மாவட்டத்தில் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பீம. தமிழ்பிரபாகரன் தலைமையிலும், மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இர.கிருட்டினமூர்த்தி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் பெ.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்ற சந்தா சேர்க்கும் பணியின் போது, இதில் தருமபுரி அதியமான் அரசு ஆ.மே.நி.பள்ளி தலைமை ஆசிரியர் சா.மணிவண்னன், இருமத்தூர் அரசு மே.நி.பள்ளி தலைமை ஆசிரியர் கி.மணி, நாய்க்கன்கொட்டாய் அரசு உ.நி.பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆர்.இராமச்சந்திரன், செம்மனள்ளி அரசு உ.நி.பள்ளி பட்டதாரி ஆசிரியர் பி.வெங்கடேசன், கிருஷ்ணாபுரம் அரசு மே.நி.பள்ளி பட்டதாரி ஆசிரியர் ப.கவுரவன், டி.துரிஞ்சிப்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி ஆசிரியர் அய்.லாவண்யா ஆகிய ஆசிரியர் பெருமக்கள் விடுதலை சந்தாக்களை மகிழ்வோடு வழங்கி சிறப்பித்தனர் (16-07-2022).
திருநெல்வேலி மாவட்டத்தில் 'விடுதலை' சந்தா சேகரிப்புப் பணி
நெல்லை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் வேல்முருகனிடம் மண்டலத் தலைவர் சு.காசி விடுதலை சந்தா புத்தகங்களை வழங்கினார். உடன் மண்டலச் செயலாளர் அய். இராமச்சந்திரன், தென்மாவட்டப் பிரச்சாரக் குழுச் செயலாளர் டேவிட் செல்லத்துரை, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பால்ராசேந்திரம், நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, மாவட்டத் துணைத் தலைவர் ச.இராசேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். மாவட்டக் காப்பாளர் சி.வேலாயுதத்தைச் சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு. உடன் மாவட்டத் துணைத் தலைவர் இராசேந்திரன். நகரத் தலைவர் பி.இரத்தினசாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று விடுதலை சந்தா பெற்ற நிகழ்வு. உடன் மாவட்டத் துணைத் தலைவர் இராசேந்திரன். பாளையங்கோட்டை இரா.முத்துக்குமார், கனகதாமசு, தொ.ப.மாசானமணி ஆகியோரிடம் சந்தா பெற்ற நிகழ்வுகள். பாப்பாக்குடி.இரா.செல்வமணியிடம் சந்தா பெற்ற நிகழ்வு. மேனாள் மாவட்டச்செயலாளர் அழகப்பன். தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கப் பொதுச்செயலாளர் கரூர் இரா.தாமோதரன், மாநிலச் செயலாளர் க.வெங்கடாசலம் விருதுநகர் மாவட்டச் செயலாளர் க.ஜெயகணேசன் ஆகியோரிடம் விடுதலை ஆண்டு சந்தாக்கள் பெறப்பட்டது.
மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் 'விடுதலை' சந்தா சேகரிப்புப் பணி
மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் 17-07-2022 அன்று மாவட்டத்தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில், மாவட்ட செயலாளர் கா.சு.அரங்கசாமி, நகர செயலாளர் வெ.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மேட்டுப்பாளையம் தெற்கு நகர தி.மு.க செயலாளர் ப.முனுசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் அருள்வடிவு ஆகியோர் 5 ஆண்டு விடுதலை சந்தாவை வழங்கினர் - மேலும் சத்தாவுக்கான ரசீது புத்தகம் ஒப்படைக்கப்பட்டது, மேட்டுப்பாளையம் நகர திராவிடர் கழகத்தோழர் ரெங்கசாமி, சாந்தி, முருகேசன் ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்தனர். மேலும் சத்தாவுக்கான ரசீது புத்தகம் ஒப்படைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் நகர திராவிடர் கழகத்தோழர் பதமநாபன், அன்னகாமாட்சி, டாக்டர் தமிழரசன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா வழங்கினர் மேலும் சந்தாவுக்கான ரசீது புத்தகம் ஒப்படைக்கப்பட்டது, மேட்டுப்பாளையம் மேனாள் மாவட்டத் தலைவர் பா.பாலசுப்ரமணியன் விடுதலை சந்தா வழங்கினார் - சந்தாவுக்கான ரசீது புத்தகம் ஒப்படைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சிவக்குமார் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா வழங்கினார். மேலும் சந்தாவுக்கான ரசீது புத்தகம் ஒப்படைக்கப்பட்டது, மேட்டுப்பாளையம் காரமடை குருசாமி விடுதலை சந்தா வழங்கினார் - சந்தாவுக்கான ரசீது புத்தகம் ஒப்படைக்கப்பட்டது, மேட்டுப்பாளையம், திம்மம்பாளையம் முத்துசாமி, இராம்தாய் ஆகியோர் 2 விடுதலை சந்தா வழங்கினார் - சந்தாவுக்கான ரசீது புத்தகம் ஒப்படைக்கப்பட்டது.
------
காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ஜெயக்குமாரிடம் தலைமைக் கழகக் கடிதம், 10 விடுதலை சந்தாக்களுக்கான ஒரு புத்தகத்தை ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் கொடுத்தார். மாவட்டச் செயலாளர் க. இளவ ரசன், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுத்தறி வாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர். (பள்ளிக்கரணை, 17-07-2022).
மேட்டுப்பாளையம், மேடூர் முருகேசன் - அம்சவேணி, மாவட்ட இளைஞரணி தலைவர் மு.வீரமணி, தீபலெட்சுமி, சீதாலட்சுமி, தருமன் ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 7 விடுதலை சந்தா வழங்கினர் - சந்தாவுக்கான ரசீது புத்தகம் ஒப்படைக்கப்பட்டது.
பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் செயலாளர் சு. கலிய மூர்த்தியிடம் தஞ்சை மண்டல செயலாளர் குடந்தை க. குருசாமி மற்றும் குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் பாபநாசம் திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை யில் மணி மெட்ரிகுலேஷன் பள்ளியினுடைய தாளாளர் மு. சேகர் இரண்டு ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார்.
சென்னை தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர், வழக்குரைஞர் சு.ஜெயந்தி விடுதலை ஆண்டு சந்தாவை சென்னை மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் மு. சண்முகப்பிரியனிடம் வழங்கினார், உடன் தென்சென்னை இளைஞர் அணி செயலாளர் ந. மணிதுரை. (17.07.2022).










No comments:
Post a Comment