40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!


  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ‘விடுதலை' சந்தா சேகரிப்பு பணி 

புதுக்கோட்டை மண்டல  கழகத்தலைவர் பெ.இராவணன்  இரண்டு ஆண்டுசந்தாவும், அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் குமார் பத்து சந்தா இரசீதும்,  அறந்தாங்கி மாவட்டபகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.வேல்சாமி-அமுதா இணையரின் பிறந்தநாளை முன்னிட்டு ஓராண்டு விடுதலை சந்தாவும், புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் மு.அறிவொளி, மாவட்டச்செயலாளர் ப.வீரப்பன் இருவரும் நான்கு சந்தாக்களும், மேனாள் மாநில இளைஞரணி  துணைச்செயலாளர் பொன்னமராவதி வெ.ஆசைத்தம்பி  ஓராண்டு விடுதலை சந்தாவும் அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் இரா.ஆனந்தன் ஓராண்டு விடுதலை சந்தாவும்,  அறந்தாங்கி முத்து.சிவகிருபாகரன் (காங்கிரசு)ஆறுமாத விடுதலை சந்தாவும்,  அறந்தாங்கி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் குழ. சந்திரகுமார் இருபது சந்தா இரசீதும்,  எம்.சிவப்பிரகாசு ஆறுமாத விடுதலை சந்தாவும், அறந்தாங்கி  என்.எஸ்.தீன் ஆறுமாத விடுதலை சந்தாவும், அறந்தாங்கி மேனாள் சட்டமன்ற திமுக உறுப்பினர் உதயம் எஸ்.சண்முகம் ஓராண்டு விடுதலை சந்தாவும்,  அறந்தாங்கி நூதனம் கட்டுமானப்பொருள் கடையின் உரிமையாளர் எம் காஜா ஓராண்டு விடுதலை சந்தாவையும் அளித்தும்  மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடமிருந்து சந்தா ரசீது புத்தகங்களையும் பெற்றுக்கொண்டனர் . இதில் மண்டல திராவிடர்கழக தலைவர்  பெ.இராவணன் , மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, ஒன்றியத்தலைவர் குழ.சந்திரகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் காரல்மார்க்ஸ்,  மாநில மாணவர்கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

---------
தாம்பரம் மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேகரிப்பு பணி  

13.7.2022 அன்று மாலை தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு,  தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் மற்றும் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் முன்னிலையில் விடுதலை 5 அரையாண்டு சந்தாக்களையும் வழங்கினார். சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோஇமோகன்ராஜ், தாம்பரம் நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும்  தாம்பரம் கழக மாவட்டத் தலைவர் ப.முத்தையனிடம்  தாம்பரம் மாவுமில் உரிமையாளர் கலையரசி 1 ஆண்டு சந்தாவும்,  பழக்கடை பாலாஜி, காய்கறி சங்க செயலாளர் உமாபதி, மார்க்கெட் ஏழுமலை, சமூக சேவகர் அ.அரிச்சந்திரன் ஆகியோர் அரையாண்டு சந்தாக்களையும் வழங்கினர்.

--------

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 36 ஆவது  வட்ட கழக செயலாளர் (திமுக) க.பாபு  திராவிடர் மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மையிடம் ஓர் ஆண்டிற்
கான விடுதலை சந்தாவை வழங்கினார். உடன் திமுக அய்.டி விங் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் 
பா.ஆனந்தி.
-------
4.7.2022 அன்று சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன் மற்றும் கோவிலம்பாக்கம் பேரூர் கழக தலைவர் வெ.மணிகண்டன் ஆகியோரிடம் கோவிலம்பாக்கம் தி.மு.கழக 4ஆவது வட்ட 
மாமன்ற உறுப்பினர்  விஜயகுமார்  அரையாண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  
------
நாகை மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு
நாகை மாவட்டத்தில் 14-07-2022 அன்று மாவட்டத் தலைவர்  வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன்  தலைமையில் மாவட்ட  செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மண்டல மாணவர் கழக கழக செயலாளர் மு.இளமாறன், ம.இளமாறன் ஆகியோர் முன்னிலையில்  நாகை மாவட்டம் தி.மு.க திருமருகல் தெற்கு ஒன்றியசெயலாளர்  ஆர்.டி.எஸ்.சரவணன்,  விடுதலை சந்தாக்களுக்கான ரசீது புத்தகங்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் பெற்றுக் கொண்டனர்.





No comments:

Post a Comment