இந்தியாவில் முதல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பீகார் மாணவர் அமெரிக்காவில் படிக்க ரூ.2.5 கோடி ஊக்கத் தொகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

இந்தியாவில் முதல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பீகார் மாணவர் அமெரிக்காவில் படிக்க ரூ.2.5 கோடி ஊக்கத் தொகை

பாட்னா, ஜூலை 9 தினக் கூலி தொழிலாளி ஒரு வரின் மகன் அமெரிக்கா வின் புகழ்பெற்ற லபாய்ட் கல்லூரியில் சேர்க்கை யோடு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2.5 கோடி உதவித்தொகையும் பெற்று  சாதனை படைத் துள்ளார். 

பாட்னாவின் கோன்புரா கிராமத்தைச் சேர்ந்த பிரேம் குமார் (17) என்ற மாணவர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தாழ்த் தப்பட்ட சமூகத்தில், மிகவும் ஏழ் மையான குடும்பத்தைச் சேர்ந் தவர். இவரது தந்தை தினக்கூலியாக இருக்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்கா வின் புகழ்பெற்ற லபாயெட் கல்லூரியில் படிப்பதற்கான இரண்டரை கோடி ரூபாய் ஊக்கத் தொகை (ஞிஹ்மீக்ஷீ திமீறீறீஷீஷ்sலீவீஜீ) பிரேம் பெற்றுள்ளார். இரண்டரைக் கோடி ரூபாய் உதவித் தொகை யுடன், லஃபாயெட் கல்லூரியில் இளங்கலை படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் பட்டதாரியான பிரேமின் விடா முயற்சியா லும், திறமையாலும் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.இயந்திரவியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் ஆகியவற்றை படிக்க வுள்ளார். மேலும், படிப்பு செலவு, பயணச் செலவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து தேவை களும் இந்த உதவித்தொகையில் அடங்கும். இதுவரை உலகளவில் இந்த 'ஸ்காலர்ஷிப்பை' 6 மாண வர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.

இந்தியாவில் இந்த 'ஸ்காலர் ஷிப்பை' பெறும், முதல் தாழ்த்தப் பட்ட சமூக மாணவர் பிரேம்தான். பீகாரில், தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளுக்கான சேவை அமைப்பான டெக்ஸ்டெரிட்டி குளோபல் என்ற அமைப்பு, பிரேமை அடையாளம் கண்டு, அவருக்கு பயிற்சி அளித்துள்ளது. இதுதொடர்பாக பிரேம் கூறு கையில், "பீகாரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் சேவை அமைப்பான 'டெக்ஸ் டெரிட்டி குளோபல்' அமைப்பின் உதவியால்தான், இந்த வெற்றியைப் பெற்றுள்ளேன். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறினார்.

டெக்ஸ்டெரிட்டி குளோபல் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஷரத் சாகர் கூறுகையில், "2013ஆம் ஆண்டு முதல், நாங்கள் பீகாரில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தை களுக்காக வேலை செய்து வரு கிறோம். இந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மூலம் அடுத்த தலை முறைக்கான வேரை உருவாக்கு வதும், அவர்களை உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைப்பதும்தான் எங்களது நோக் கம்" என்று கூறினார்.மாணவரின் விடா முயற்சிக்கும், திறமைக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment