காரியாபட்டி அருகே 1100 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் பள்ளி தடயங்கள் கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

காரியாபட்டி அருகே 1100 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் பள்ளி தடயங்கள் கண்டெடுப்பு

விருதுநகர், ஜூலை 7 விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே புல்லூர் கிராமத்தில் 1,100 ஆண்டு களுக்கு முந்தைய சமணர் பள்ளி தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன.

காரியாபட்டி வட்டம் புல்லூர் கிராமத்தில் பழைமையான இடிந்த கோயிலில் கல்வெட்டுகள் இருப்ப தாக அக்கிராமத்தைச் சேர்ந்த போஸ் வீரா மற்றும் மாரீஸ்வரன் ஆகியோர் தகவல் கொடுத்தனர். அதன்படி , பாண்டிய நாடு பண்பாட்டு மய்யத் தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மதுரை அருண் சந்திரன் 4.7.2022 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 

இது குறித்து அவர் கூறியதாவது: இக்கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டதில் மொத்தம் 9 துண்டு கல்வெட்டுகள் கிடைத்துள் ளன. இவை அனைத்திலும் வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத் தால் எழுதப்பட்டுள்ளன. இதில் முற்கால பாண்டிய மன்னன் மாறன் சடையனின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டும், ராஜராஜ சோழன் இக்கோயிலுக்கு கொடுத்த நிவந்தம் பற்றிய கல்வெட்டும் காணப்படுகிறது. புல்லூரின் பழைய பெயர் திருப் புல்லூர் என்று கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. இது 1100 ஆண்டு களுக்கு முந்தைய சமணர் பள்ளியின் தடயங்கள் ஆகும். இது ஒரு சமணர் பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது. இக்கோயிலின் பெயர் திருப்புல்லூர் பெரும்பள்ளி, உள்ளிருக்கும் கடவுளர் அருகர் பட்டாளகர் என்பதை அறிய முடிகிறது. கோயிலில் நந்தா விளக்கு எரிக்க ஆடுகள் கொடையாக வழங்கப் பட்டதும் இக்கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். பாண்டிய நாட்டில் சமண மதம் சிறப்பான நிலையில் இருந்ததற்கு இச்சமணப் பள்ளியே ஒரு சிறந்த உதாரணம். ஏற்கெனவே, விருதுநகர் மாவட்டம் குரண்டியில் திருக்காட்டாம்பள்ளி என்ற சமணர் பள்ளி கண்டறியப் பட்டுள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இப்பள்ளி இரண்டாவது சமணப் பள்ளியாகும். மேலும் குண்டாற்றின் மேல் கரை யான மேல உப்பிலிக்குண்டு கிராமத் தில் தீர்த்தங்கரர் சிற்பம் கண்ட றியப்பட்டுள்ளது. 

இங்குள்ள 9 துண்டு கல்வெட்டு களையும் முறை யாக படி எடுத்து ஆய்வு செய்ய தொல் லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார் அவர்.   

No comments:

Post a Comment