அரியலூர் மாநாட்டிற்கு காரைக்குடியிலிருந்து தொடர் வண்டியில் பெருந்திரளாக பங்கேற்க கலந்துரையாடலில் முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

அரியலூர் மாநாட்டிற்கு காரைக்குடியிலிருந்து தொடர் வண்டியில் பெருந்திரளாக பங்கேற்க கலந்துரையாடலில் முடிவு!

காரைக்குடி, ஜூன் 30  அரியலூர் மாநாட்டிற்கு காரைக்குடியிலிருந்து பல்லவன் தொடர் வண்டியில் சென்று பெருந்திரளாக பங்கேற்க கலந் துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

காரைக்குடி கழக மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நேற்று (29.06.2022) மாலை 5 மணிக்கு காரைக்குடி குறள் அரங்கத்தில் மாவட்ட தலைவர் ச. அரங்கசாமி தலை மையில்  நடைபெற்றது. சிவகங்கை மண்டல தலைவர் கே.எம். சிகாமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், பொதுக்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி முன்னிலை வகித்தனர்.

புதிதாக மண்டல தலைவராக பொறுப் பேற்ற கே.எம்.சிகாமணிக்கு மாவட்ட தலை வர் ச. அரங்கசாமி பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார். 

கலந்துரையாடல் கூட்டத்தின் நோக் கத்தை குறித்து பேசிய மாவட்ட செயலாளர் ம.கு. வைகறை,  "திராவிட மக்களின் வாழ்வில் 'விடுதலை' ஏடு ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றங்கள் குறித்தும், நம் உரிமைகளை வென்றெடுத்த போராயுதம் 'விடுதலை' என வும், பெரியார் தொடங்கிய பெரும் பணியை இன்றும் உயிர்ப்போடு உலக மெங்கும் பரப் பும் ஆசிரியரின் அரும் பணியை எடுத் துரைத்தார்."

கழகத்தில் புதிதாக இணைந்த இளை ஞர்கள் செந்தில் பிரபாகரன், நா.செல்வநாதன் ஆகியோருக்கு இயக்க நூல்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தீர்மானம் 1: 

சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரு.இராசாராமின் தந்தையார் பெரி.பெருமாள், காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர் திருக்குறள் நாராயணசாமி ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது 

தீர்மானம் 2:

மதுரை (25.06.2022) பொதுக்குழுவின் முதன்மைத் தீர்மானமான 88 ஆண்டு 'விடு தலை'க்கு 60 ஆண்டுகள் ஆசிரியரின் ஓய் வறியா தொண்டிற்கு நன்றி பாராட்டி 'விடுதலை'க்கு அதிகப்படியான சந்தா சேர்ப்ப தென தீர்மானிக்கப்பட்டது .

தீர்மானம் 3:

 ஜூலை 30 இல் அரியலூர் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு காரைக்குடியில் இருந்து பல்லவன் தொடர் வண்டியில் சென்று பெருந்திரளாக பங்கேற்பதெனவும், நன்கொடையை திரட்டி வழங்குதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

 நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் இ.ப.பழனிவேல், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் விஞ்ஞானி சு.முழுமதி, ப க. மாவட்ட செயலாளர் ந.செல் வராசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் குமரன் தாஸ், காரைக்குடி நகர தலைவர் ஜெகதீசன், சிவகங்கை மண்டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் பிரவீன் முத்துவேல், பேராசிரியர் மு.சு.கண்மணி, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்வமணி, கல்லல் ஒன்றிய தலைவர் ஆ.சுப்பையா, பெரியார் பெருந்தொண்டர் ப.சுந்தரம், கைவல்யம், சேகர் (த.நா.போ.க), ச.அறிவரசு, செந்தில் பிரபாகரன், நா.செல்வநாதன் ஆகியோர் பகேற்று சிறப்பித்தனர் 

No comments:

Post a Comment