மத மனநோய்ப் பிடித்து அலையும் பிஜேபி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

மத மனநோய்ப் பிடித்து அலையும் பிஜேபி

பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார், "மொழி என்பது வேறு பிரச்சினை, ஆனால் அடிப் படை வரலாற்றை உங்களால் மாற்ற முடியாது" என ஒன்றிய உள்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலளித்திருக்கிறார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்திய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி யொன்றில், "இந்தியாவிலுள்ள பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் பாண்டியர்கள், சோழர்கள், மவுரியர்கள், குப்தர்கள் போன்ற பல பேரரசுகளைப் புறக்கணித்துவிட்டு, முகலாயர்களின் வரலாற்றை மட்டுமே பதிவுசெய்ய முக்கியத்துவம் கொடுத்து உள்ளனர். அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நம்மிடமும் பல பேரரசுகள் உள்ளன. வரலாற்றுப் புத்தகங்களை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இது" எனப் பேசியிருந் தார்.

இந்த நிலையில் அமித் ஷா-வின் பேச்சுக்கு பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பதி லளித்திருக்கிறார். செய்தியாளர் சந்திப்பின்போது, அமித் ஷா-வின் கருத்து குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதிஷ் குமார், "அப்படியானால் வரலாற்றை நீங்கள் மாற்றுவீர் களா... எனக்குப் புரியவில்லை, அதை எப்படி ஒருவர் மாற்ற முடியும்...? வரலாறு என்பது எப் போதும் வரலாறுதான். 

மொழி என்பது வேறு பிரச்சினை. ஆனால், அடிப்படை வரலாற்றை உங்களால் மாற்ற முடியாது. அதனை மாற்றவும் நினைக்கவேண்டாம். அதனை அழிக்கவும் முடியாது" என்று அமித்ஷா விற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்

பிஜேபி ஒன்றியத்திலும், பல மாநிலங்களிலும், ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதலே நாட்டில் மொழிப் பிரச்சினை, மதப்பிரச்சின, கலாச்சாரப் பிரச்சினைகள் தலைதூக்கி இறுதியில் மோதல் களில் முடிவடைகிறது. எதற்கெடுத்தாலும் இந்து மதப் பார்வை - மாற்று மதங்களான இஸ்லாம், கிருத்தவத்தின் மீது ஒரு குரூரப் பார்வை!

எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால் சிறுபான்மையினர்களின் வீடுகளை அரசே புல்டோசரைக் கொண்டு இடித்துத் தள்ளும் அளவுக்கு அத்துமீறல் நடந்து கொண்டுள்ளது.

பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பவரும், பீகார் மாநில முதல் அமைச்சருமான நிதிஷ் குமாரே கண்டிக்கும் அளவுக்கு ஒன்றிய அரசின் போக்கு மதம் பிடித்த மனநோயாளியாகி விட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மை மீது கால் வைத்து மிதித்து அதற்கு எதிரான மனுவாதத்தைத் தூக்கிப்பிடிப்பது எத்தகைய விபரீதம் - துரோகம்!

உலக நாடுகள் மத்தியிலும் இந்தியாவின் மீது தவறான கருத்தும் மதிப்புக் குறைவும் நாளும் வளர்ந்து வருவது நல்லதல்ல - கடுமையான பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் - எச்சரிக்கை!

No comments:

Post a Comment