சென்னை, ஜூன் 28 தமிழ் நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்தும், புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடை பெற்ற அமைச்சரவைக் கூட் டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப் பதுடன், கடன் தொல்லை மற்றும் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
இதனால் பல்வேறு சமூக, பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலை நிகழ்வுகளும் நிகழ் வதை அரசின் கவனத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டுவந்தன.
இதையடுத்து, கடந்த ஜூன் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு, ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற் படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்த விளையாட்டுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவற்றை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூ கத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்து ஆய்வுசெய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் மேற் கொள்ள வேண்டிய நடவ டிக்கைகள் தொடர்பாக, அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இக்குழுவில், அய்அய்டி தொழில்நுட்ப வல்லுநர் சங்கர ராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளரு மான லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகி யோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் குழு தனது அறிக் கையை தலைமைச் செயலகத் தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னிடம் நேற்று சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை மீது எடுக் கப்பட வேண்டிய நடவடிக் கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார் பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று (27.6.2022) மாலை 6.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், துரை முருகன், நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் நா.முரு கானந் தம், தொழில்துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 7.55 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வ தற்காக அமைக்கப்பட்ட குழு வின் அறிக்கை விவாதிக்கப் பட்டு, விளையாட்டை தடை செய்வதற்கான அவசரச் சட் டம் தொடர்பாக முடிவெடுக் கப்பட்டது.
தொழில் நிறுவனங்களுக்கு சலுகை
தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விண்ணப் பித்த புதிய தொழில் நிறுவ னங்களுக்கு சலுகைகள், அனு மதிகள் வழங்குவதற்கான ஒப் புதல்களும் அளிக்கப்பட்டன. இதுதவிர, கரோனா பரவல் கட்டுப்பாடு மற்றும் சில துறை கள் தொடர்பான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்ட தாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment