அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக கல்விக் கொள்கை இருக்க வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் மேனாள் நீதிபதி ஞானப்பிரகாசம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக கல்விக் கொள்கை இருக்க வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் மேனாள் நீதிபதி ஞானப்பிரகாசம்

சென்னை, ஜூன் 18- அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக கல்விக் கொள்கை இருக்க  வேண்டும் என மேனாள் நீதிபதி ஞானப்பிரகாசம் தெரிவித்தார். “மக்களால், மக்களுக் கான,  மக்களின் ஆட்சி என்ற அரசின் கோட் பாடு'' என்ற தலைப்பில் கருத் தரங்க மும், ''அரசமைப்புச் சட்டத்தின் பார்வை யில் கல்வியும் ஜனநாயகமும்'' என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழாவும் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை சார்பில் சென்னையில் வியாழனன்று (ஜூன் 16) நடை பெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி வெ.கோபால கவுடா நூலை வெளியிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.  பெற்றுக் கொண்டார். 

இதில் மேனாள்  நீதிபதி கே.ஞானப் பிரகாசம் பேசுகையில், 

சட்டத்தின் முன் அனைவரும் சமம்  என்றால் மட்டும் போதாது, சமூகத்தி லும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஜாதி,  மொழி, மதம், இனம், நிறம் ஆகியவற் றின் பால் வேறுபாடு பார்க்கக்கூடாது. பேச்சுரிமை, கருத் துரிமை ஒவ்வொ ருவரின் அடிப்படை உரிமை. அதே போல் மதச்சுதந்திரமும் வழங்கப் பட்டுள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு எந்த தொழிலையும் செய்வ தற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. சிறு பான்மையினரை பாதுகாக்க வேண்டும் என சட்டப்பிரிவு 29  கூறுகிறது. ஆனால் இன்று அனைத்து  அடிப்படை உரிமைகளும் பறிக்கப் பட்டு  வருகின்றன.

மாணவர்கள் அரசமைப்பு சட்டம் குறித்து படிக்க வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கை தனி யார் பயிற்சி மய்யத்தை ஊக்குவிக்கும் வகையிலும், வசதி படைத்தவர் களுக்கானதாகவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. அரசமைப்புச் சட் டத்திற்கு உட்பட்டதாக கல்விக் கொள்கை இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

“தேசிய கல்விக் கொள்கை 2020, ஜனநாயகத்திற்கு ஒரு சவால்” என்ற  தலைப்பில் எம்.அய்.டி.எஸ். பேரா சிரியர்  சி.லட்சுமணன் பேசுகையில், டில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் காங்கிரஸ் கட்சியின் பெண் மக்களவை  உறுப்பினரின் ஆடை கிழிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் நிகழ்வு களை பார்த்தால் நாட்டின் ஜனநாயகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்ற  கேள்வி எழுகிறது.  2024இல் மீண்டும்  பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு சவக்குழி தோண்டிவிட்டோம் என்று அர்த்தம். தனிமனித வளர்ச்சிக்கு மட்டும் கல்வி  உதவவில்லை, சமூகத் தில் வளர்ச்சிக்கும் கல்வி உதவுகிறது. கல்வியாளர்கள் சுதந்திரமாக புதிய கல்விக் கொள்கை குறித்த தங்கள் கருத்தை முன்வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  இடஒதுக் கீட்டை பொருளற்றதாக்கவே புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். “தேசிய கல்விக் கொள்கை அரசமைப்புச் சட்டத்திற்கு ஒரு  சவால்” என்ற தலைப்பில் வழக்கறி ஞர் பு.பா.சுரேஷ்பாபு பேசினார். பொது  பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு நோக்கவுரையாற்றி னார். முன்னதாக தலைவர் ரத்தின சபாபதி வரவேற்றார். மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment