பெரியார் பார்வையில் பகுத்தறிவாளர் கழகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

பெரியார் பார்வையில் பகுத்தறிவாளர் கழகம்


 “சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு’’ என்றார் அறிவாசான் தந்தை பெரியார்.

மேலும், “சமுதாயத் துறையில் இன் றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடைமை முதலிய குணங்கள் மனிதனின் அறிவுக் குறை வினால் பகுத்தறிவு இல்லாததால் அல்லது பகுத்தறிவை செவ்வனே பயன்படுத்தாத தால் ஏற்பட்டவையேயன்றி காலக்கொடு மையாலோ, கடவுள் தன்மையாலோ ஏற் பட்டது அல்ல” என்பது தந்தை பெரியாரின் கருத்தாகும்.

அத்தகைய பகுத்தறிவைப் பரப்பும் பணியில் இறுதி மூச்சு அடங்கும் வரையில் ஈடுபட்டவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். நேரடியாக திராவிடர் கழகத்தில் பணியாற்ற இயலாதவர்கள் பகுத்தறிவைப் பரப்பும் தொண்டறப் பணி யைச் செய்வதற்காக 1970ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகத்தை உருவாக்கினார்.

இதன் தொடக்கவிழா சென்னை கலை வாணர் அரங்கத்தில் 20.11.1970 அன்று நடை பெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களை அழைத்தபோது, அவர் தம்மையும் பகுத் தறிவாளர் கழகத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத் தார்.

அந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது உரையில் அமைச்சர் என்.வி.என். அவர் கள் முன்னின்று தமிழக அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களையும் பகுத்தறி வாளர் கழகத்தின் சிறப்பு உறுப்பினர்களாக சேர்த்து சிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், பங் கேற்றிருந்த இரு அமைச்சர்களும் நாங் களும் உறுப்பினராக சேரவேண்டும் என்று அறிவித்தனர்.

அன்றைய சட்டப்பேரவைச் செயலா ளர் திரு. சி.டி.நடராஜன் அவர்கள் தலை வராகவும், அய்.ஏ.எஸ். அதிகாரிகளான கா.திரவியம், வி.எஸ்.சுப்பையா ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், மாநிலக் கல்லூரியின் பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்கள் செயலாளராகவும் தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் கிளைகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

 8.11.1971 அன்று காரைக்குடி மேல ஊர ணித் தெருவில் பகுத்தறிவாளர் கழகத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவாளர் கழகம் அமைக்கப்படுவதன் காரணத்தை கீழ் கண்டவாறு தெரிவித்தார்.

நாம் பகுத்தறிவாளர் கழகம் துவக்குகி றோம் என்றால் மனிதர்களுக்கான கழகத் தைத் துவக்குகிறோம் என்பதுதான் தத்து வம். ஏன் என்றால் உலகில் மனிதன் ஒரு வனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மற்ற எந்த ஜீவன்களுக்குமில்லை. பகுத்தறி வுள்ள மனிதன் அதனைச் சரியாக பயன் படுத்தாத காரணத்தால் மிருகமாக இருந் தான். இப்போதுதான் மனிதனாக முற்பட்டி ருக்கிறான். அதை காட்டுவதுதான் இப் பகுத்தறிவுக் கழகம் என்பதாகும். மனிதன் தோன்றி எத்தனையோ ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின் றன. நமக்குத் தெரிய 3,000, 4,000 ஆண்டு களின் சரித்திரம் தெரிகிறது என்றாலும், இந்த நூற்றாண்டில்தான் மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள முற் பட்டு அதன் காரணமாக பல விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் கண்டுபிடித்துள்ளான்.

இத்தனை ஆண்டு காலம் மனிதன் தன் பகுத்தறிவை - சிந்தனா சக்தியைப் பயன் படுத்த முடியாமல் கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற சில தடைகளிலிருந்ததால் மனிதன் பகுத்தறிவு  பெற்றும் சிந்திக்க முடியாதவ னாகி விட்டான். அத்தடைகளைச் சிறிது சிறிதாக உடைக்க ஆரம்பித்தான். அதன் பலனாக மனிதனின் ஆயுள் வளர ஆரம் பித்ததோடு, பல விஞ்ஞான அதிசய அற் புதங்கள் எல்லாம் தோன்ற ஆரம்பித்தன. இன்று மனிதன் சந்திரனுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கின்றான்.

இந்நிலையில் நாம் இப்போதுதான் பகுத்தறிவிற்கே கழகம் அமைத்துக் கொண் டிருக்கின்றோம். இந்த ஒரு நாட்டில் மட்டும் தான் நமது மூடநம்பிக்கையைக் கொண்டு பலன் அனுபவிக்கும்படியான ஒரு ஜாதிக் கூட்டம் இருக்கிறது. அதுதான் எல்லா வகையிலும் நாம் அறிவு பெற முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

உலகில் மதத்தின் பெயரால், உயர்ந்த ஜாதி  - தாழ்ந்த ஜாதி என்கின்ற பேதம் இந்த ஒரு நாட்டில் தான் இருக்கிறது. இங்குதான் மனிதன் சமுதாயத் துறையில் இழிமகனாக இருக்கிறான். எனவே, மற்ற எல்லா நாடு களையும்விட நம் நாட்டிற்குத்தான் பகுத் தறிவாளர் கழகம் மிக மிக முக்கியமாகும். சமுதாய சீர்திருத்தம், பகுத்தறிவுத் தொண்டு ஆகியவைகளை திராவிடர் கழகம் செய்து வந்தாலும், அது அரசியலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் நமது மக்களின் நலனையும், தேவையையும் கருதி அரசியல் கட்சிகளை ஆதரிக்க வேண்டி இருப்பதால் அரசாங்க உத்தி யோகஸ்தர்கள் இதில் பங்கு கொள்ள வாய்ப்பில்லையானதால் அரசியல் சார் பற்ற தன்மையில் இக்கழகமானது அமைக் கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கழகங்கள் இதுவரை 20க்கும் மேல் அமைக்கப்பட்டுள்ளன. மதம், கடவுள் என்கின்ற முட்டாள்தனமான மூட நம்பிக்கையானது மனிதனிடையே புகுத்தப்பட்டதோடு, சிந்திப்பது பாவம், சிந்தித்தால் நரகத்திற்குப் போக வேண்டும் என்கிற அச்சத்தினையும் ஏற்படுத்தி விட்ட தால் மனிதன் சிந்தனையற்ற காட்டுமிராண் டியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அதனை மாற்றி மனிதனைப் பகுத்தறிவு வாதியாக்கவே இக்கழகமானது அமைக்கப் படுகிறது.

- (‘விடுதலை’ - 2.12.1970).

அத்தகைய பகுத்தறிவாளர் கழகம் இன்று நாடெங்கும் விரிந்து பகுத்தறிவு, மனிதநேயம், சமூகநீதி, அறிவியல் மனப் பான்மை சார்ந்த கருத்துகளைப் பரப்புரை செய்து வருகிறது.

மாநில அளவில் நூற்றுக்கணக்கான மாநாடுகளை நடத்தி, பல முக்கிய தீர்மானங் களை நிறைவேற்றி, அரசுகளுக்கு முன் மாதிரியாக வழிகாட்டி வருகிறது

மாநில அளவில் நூற்றுக்கணக்கான மாநாடுகளை நடத்தி, பல முக்கிய தீர்மானங் களை நிறைவேற்றி, அரசுகளுக்கு முன் மாதிரியாக வழிகாட்டி வருகிறது.

அறிவியல் விழிப்புணர்வு கண்காட்சி கள், பகுத்தறிவுக் கலை விழாக்கள் என்று சமூக, கலை, இலக்கியத் துறைகளில் தமது  பங்களிப்பைச் செய்துவருகிறது. 

உலக பகுத்தறிவாளர் அமைப்பான பன்னாட்டு மனிதநேய அறநெறி கழகத் (IHEU) துடன் இணைந்து உலக நாத்திகர் மாநாடுகளை நடத்தி, பல நாடுகளில் உள்ள பகுத்தறிவாளர்களை அழைத்து பங்கேற் கச் செய்திருக்கிறது பகுத்தறிவாளர் கழகம்.

மேலும் இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான (FIRA)  Fedaration of Inidan Rationalist Association  என்னும் அமைப்புடன் இணைந்து பல்வேறு இடங்களில் இந்தியா முழுவதும் பகுத்தறிவாளர் கழகம் மாநாடு களை நடத்தியுள்ளது.

அரசுத் துறைகள் அனைத்திலும் தனது கிளைகளைப் பரப்பி, பகுத்தறிவாளர் கழகம் செய்த பெரும் பணியின் மூலம்தான் இன்று  தமிழக அரசு அலுவலகங்கள் மதசார்பற்ற தன்மையில் ஓரளவிற்காவது இருந்துவருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பழைய பண்டிகைகளோடு, புதிது புதிதாய் ‘அட்சய திருதியை, புஷ்கரணி, ஹனுமன், ஜெயந்தி என்று புதிய பண்டி கைகளை   உருவாக்கி, ஒரு புறம் கார்ப்ப ரேட் முதலாளிகளும் மறுபுறம் கார்ப்பரேட் சாமியார்களும் மக்களைச் சூறையாடு கின்றனர்.

பள்ளிகளிலும் மாணவர்களிடமும் மூட நம்பிக்கைகளையும், ஜாதி உணர்வுகளை யும் புகுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி மிக மிக கட்டாயமான - தேவையான ஒன்றாகும்.

No comments:

Post a Comment