வடோதரா, ஜூன் 27- பிரதமர் மோடிக்கு எதிராக 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர் பாக தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத் தால் தள்ளுபடி செய்யப் பட்டது. தற்போது இந்த வழக்கை தொடுப்பதற்கு பின்னணியிலிருந்து செயல்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.சிறீ குமார், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வத் (Teesta Setalvad) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக பதியப்பட்ட ஒன்பது பக்க முதல் தகவல் அறிக் கையில், முன்னாள் அய். பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் பெயரும் இடம் பெற் றுள்ளது. ஆனால் ஏற் கெனவே வேறொரு வழக் கில் தொடர்புடைய அவர் பணிநீக்கம் செய் யப்பட்டு சிறையிலிருக் கிறார்.
2002ஆ-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து பிரதமர் மோடி உள்ளிட்ட சிலர் விடுவிக் கப்பட்டிருந் தனர். இப்படி விடுவிக் கப்பட்டது செல்லாது எனக் கலவரத்தில் இறந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எஹ்ஸான் ஜஃப்ரியின் மனைவி ஸகியா ஜஃப்ரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம் பிரதமர் மோடி உள்ளிட்டோரை வழக்கி லிருந்து விடுவித்தது சரியானதே எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய் தது. ஸகியா ஜஃப்ரி இந்த வழக்கை தொடர்வதற்கு காரணமாகச் செயல்பட் டது டீஸ்டா செடல்வத் தான் எனக் கூறப்படுகிறது.
சிறீ குமார், செடல்வத், சஞ்சீவ் பட் ஆகியோர்மீது மோசடி ஈடுபடுவது, தவறாகத் திரிக்கப்பட்ட ஆவணங்களைப் பயன் படுத்துவது, திரிக்கப் பட்ட ஆதாரங்களை சமர்ப்பிப்பது, மற்றவரை காயப்படுத்தும் நோக்கில் தவறானத் தகவலைத் தருவது, அரசு அதிகாரி கள் தவறான ஆதாரங் களை உருவாக்குவது, கிரி மினல் குற்றம் ஆகியவற்றை உள்ளடக்கி பல்வேறு பிரிவுகளின் (Section 468,471,194,211,218,120 B) கீழ் வழக்கு பதியப்பட் டுள்ளது.
வழக்கு பதியபட்ட பின்பு குஜராத் காவல் துறையினர் சிறி குமாரை அகமதாபாத்தில் கைது செய்தனர். செடல்வத்தை கைதுசெய்ய மும்பை சென்ற தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார், அவரை அவருடைய இல் லத்தில் கைது செய்து குஜராத் அழைத்து வந்து கைது செய்யப்படுவதாகக் கூறினர்.
இந்த கைது நடை பெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு செய்தி நிறுவனம் ஒன் றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில் டீஸ்டா செடல்வத் குறித்து பேசி இருந்தார். “உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வாசித் தேன். அதில் டீஸ்டா செடல்வத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவரால் நடத்தப்பட்டு வரும் சேவை அமைப்பு அதன் பெயர் சரியாகத் தெரியவில்லை. அந்த சேவை அமைப்பு குஜராத் கலவரம் குறித்து ஆதார மற்ற தவறானத் தகவல் களைக் கூறி வருகிறது” எனக் கூறியிருந்தார்
தீஸ்தா செடல்வத் கைதை எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர் கள் கடுமையாக எதிர்த்து கண்டனம் செய்து வரு கின்றனர்.
No comments:
Post a Comment