காற்றிலிருந்து நீரை உறிஞ்சும் ஜெல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

காற்றிலிருந்து நீரை உறிஞ்சும் ஜெல்!

தண்ணீர் பற்றாக்குறை உலகெங்கும் இருக்கிறது. இதைத் தீர்க்க, காற்றிலிருந்து நீரை எடுக்கும் பல தொழில்நுட்பங்கள் வந்தபடியே உள்ளன. அதில் அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஒரு நுட்பம், அதிக செலவு பிடிக்காதது.

கருணைக் கிழங்கு பிசின் மற்றும் தாவரங்களில் உள்ள செல்லுலோஸ் ஆகியவை கலந்த ஜெல் தான் அந்த புதிய பொருள். இந்த ஜெல்லில் உள்ள பிசின் காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்க்கிறது. ஈர்த்த ஈரம் செல்லுலோசின் வடிவமைப்பிலுள்ள இடைவெளியில் தங்குகிறது. பிறகு தேவைப்படும்போது பிடிபட்ட நீரை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

சும்மா இல்லை. ஒரு கிலோ ஜெல், காற்றிலுள்ள ஈரப்பதத்தைப் பொறுத்து, 6 லிட்டர் முதல், 13 லிட்டர் வரை நீரை உறிஞ்சித் தருகிறது. இந்த ஜெல்லை தயாரிப்பதும் எளிது. எனவே, தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு சீக்கிரமே இந்த தொழில்நுட்பம் எட்டும் என எதிர்பார்க்கலாம்.


No comments:

Post a Comment