ஒன்றிய பாஜக ஆட்சியின் அவலம் ரயில்வே துறையில் காலியாக இருந்த 92 ஆயிரம் பணியிடங்கள் நீக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

ஒன்றிய பாஜக ஆட்சியின் அவலம் ரயில்வே துறையில் காலியாக இருந்த 92 ஆயிரம் பணியிடங்கள் நீக்கம்!

புதுடில்லி, ஜூன் 30- ஆண் டொன்றுக்கு படித்த இளைஞர் களில் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து, ஆட்சிப் பொறுப் பேற்ற பாஜகவின் ஒன்றிய அரசு, வேலை வாய்ப்புக்கான பணியிடங் களையே நீக்கி யிருப்பது படித்து முடித்து வேலைவாய்ப்புகளை எதிர் நோக்கி காத்திருக்கக்கூடிய இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் நிலை யில், ரயில்வே துறையில் 92 ஆயிரம் காலிப்பணியிடங் களை ஒன்றிய பா.ஜ.க., அரசு நீக்கியுள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018_2019ஆம் ஆண்டு களிலும், 2021_2022ஆம் ஆண்டுகளிலும் இந்திய ரயில்வேயில் பல்வேறு நிலை களிலான பணியிடங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. இத்தனை பணியிடங் களை ஒட்டு மொத்தமாக நீக்கிவிட்ட போதிலும் கூட, இந்திய ரயில்வேயில் தற்போது 2 லட்சத்து 98 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. பணிச் சுமை மற்றும் பணிச் சூழலுக்கு ஏற்ப, புதிய பணியிடங்களை உரு வாக்குதல் மற்றும் பணியிடங்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்திய ரயில் வேயில் 2019_2020ஆம் நிதி யாண்டில் மட்டும் 17 மண்டலங் களிலிருந்து 31 ஆயிரத்து 275 பணியிடங்கள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன. நாடு முழுவ தும் ரயில் வேயில் ஒட்டு மொத்தமாக நீக்கப்பட்ட பணியிடங்கள் 92 ஆயிரத்து 90 ஆகும். 2018-_2019இல் 23 ஆயிரத்து 366 இடங்களும், 2020_2021இல் 31 ஆயிரத்து 275 இடங் களும், 2021_-2022இல் 27 ஆயிரத்து 477 இடங்களும் நீக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வேலையில்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள், ஒன்றிய பா.ஜ.க., அரசின் செயலால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment