55 மணி நேரம் சைக்கிள் ஓட்டிய சாதனைப் பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

55 மணி நேரம் சைக்கிள் ஓட்டிய சாதனைப் பெண்

2 குழந்தைகளின் தாயான ப்ரீத்தி, 430 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனையின் தேவைகளை பூர்த்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

லடாக், புனேவைச் சேர்ந்த 45 வயதான ப்ரீத்தி மாஸ்கே, லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லேவில் இருந்து மணாலி வரை 55 மணி நேரம் 13 நிமிடங்களில் தனியாக சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். 2 குழந்தைகளின் தாயான ப்ரீத்தி, 430 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனையின் தேவைகளை பூர்த்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  8,000 மீ உயரம் கொண்ட இந்த பாதை மிகவும் கடினமானது என்றும், பலத்த காற்று, பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் வெப்பநிலை உள்பட மாறுபட்ட காலநிலையில் அவர் சைக்கிள் ஓட்ட வேண்டியிருந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

மூச்சுத் திணறல் காரணமாக நான் இரண்டு முறை ஆக்ஸிசன் சிலிண்டர்களை பயன்படுத்தினேன் என்றும் பீரித்தி குறிப்பிட்டுள்ளார். 

தனக்கு இருந்த நோய் பாதிப்பை சமாளிக்க, 40 வயதில் நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன் என்று கூறும் அவர், ஒருவரின் ஆர்வத்திற்கு வயது ஒரு தடையல்ல என தெரிவித்தார். என் பயத்தை என்னால் வெல்ல முடிந்ததால் எந்த பெண்ணாலும் இது முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment