சுயமரியாதை; சமூக நீதி; சமூக நல்லிணக்கம்; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி!
தமிழர் தலைவர் ஆசிரியர், மாணவர்களுக்கு கற்பித்த "திராவிட மாடல்" இலக்கணம்!
குற்றாலம். ஜூன் 12- பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நான்காம் நாளில் “திராவிட மாடல்” உள் ளிட்ட வகுப்புகள் நடத்தப்பட்டன. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கலந்துகொண்டு இரண்டு வகுப்பு கள் எடுத்தார்.
குற்றாலம் வீகேயென் மாளி கையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நான்காம் நாளான 11-6--2022,சனிக்கிழமை அன்று, முதல் வகுப்பே தமிழர் தலைவர் ஆசிரியர் வகுப்புதான்! தலைப்பும் புதியதாகவும், உற்சாகம் ஊட்டக் கூடியதாவும் இருந்தது. ஆம், இன் றைய சூழலில் இந்திய துணைக் கண்டத்தில் மட்டுமல்ல, உலகள வில் ஒரு ஆக்கபூர்வமான விவா தத்தை உண்டாக்கியிருக்கக்கூடிய “திராவிட மாடல்” தான் தலைப்பு! ஆகவே மிகவும் உற்சாகமாக தொடங்கியது.
திராவிட மாடலுக்கு இலக்கணம்!
எடுத்த எடுப்பிலேயே ஆசிரியர், அரசியல் எதிரிகள் இந்த சொல் லைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்று கைதட்டலுடனேயே தொடங்கி னார். பிறகு சொல் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், கருத்தளவில் நூற்றாண்டு பழை யது என்றார். அந்த நூற்றாண்டின் தொடக்கத்தை, “எப்படி தாகம் உள்ளவருக்கு தண்ணீர் பந்தல் தேவைப்படுகிறதோ, அதுபோலவே மக்களுக்குத் தேவைப்பட்டிருக் கிறது திராவிடர் இயக்கம்!" என்று விளங்க வைத்தார். அரியலூரைச் சேர்ந்த டாக்டர் கலையரசன், ஆய் வாளர் விஜயபாஸ்கர் ஆகிய இரு வரும் எழுதிய “Dravidian Model” என்றே ஆங்கிலத்தில் வெளிவந் துள்ள ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். முன்னோட்டமாக இவைகளையெல்லாம் சொல்லி விட்டு, ‘திராவிட மாடல்' என்றால் என்ன? என்று ஒரு கேள்வியை எழுப்பியவாறே தமிழ்நாடு அர சின் நிதிநிலை அறிக்கையை எடுத் துக்கொண்டு, “சுயமரியாதை; சமூக நீதி, சமூக நல்லிணக்கம், அனைவ ரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்ற நான்கு கருத்துகளை படித் துக்காட்டி, மாணவர்கள் அதை குறித்துக் கொள்வதற்கு அவகாசம் கொடுத்து, “இதுதான் திராவிட மாடல்” என்றார். எழுதுவதை நிறுத்தி விட்டு மாணவர்கள் பல மாக கைகளைத் தட்டினர். ”இந்த நான்கும் தமிழ்நாட்டில்தான் இருக் கின்றது. அதனால்தான் இது திரா விட மாடல் அரசு!” என்று இடை வெளி விடாமல் தொடர்ந்தார். கைதட்டலும் தொடர்ந்தது.
சென்னை மாகாண சங்கம்
தொடர்ந்து இதற்குக் காரண மான நூற்றாண்டுகளுக்கு முந் தைய நீதிக்கட்சியை பற்றி விவரித் தார். அப்போது அதிகம் புழக்கத் தில் இல்லாத ஒரு வரலாற்றுத் தகவலை சிறப்பு கவனம் கொடுத் துச் சொன்னார். அதாவது நீதிக் கட்சியின் தாக்கத்தால் விழிபிதுங்கி நின்ற காங்கிரஸ் கட்சி, அதற்குப் போட்டியாக சென்னை மாகாண சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, சூழ்ச்சியாக பெரியாரையே துணைத்தலைவ ராகப் போட்டதையும், அதில் திரு.வி.க. போன்றவர்களும் முக்கி யப் பொறுப்பில் இருந்ததையும், பெரியாரைப் போன்றவர்கள் இந்த சூழ்ச்சியைப் பற்றி அறியாமல் இருந்ததையும், பின்னர் விளங் கிக்கொண்டு அதிலிருந்து விலகிய தையும், அந்த சென்னை மாகாண சங்கமும் இரண்டாண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை என்ற வர லாற்றுச் சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.
‘தங்கமான மனிதர்' கேத்தன் தேசாய்!
இப்படி திராவிடர் இயக்கத்தின் சாதனைகளை சொல்லிக்கொண்டு வரும்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றி பேசும் போது, “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைத்தார்” என்பதை நினைவு கூரும்போது, கேத்தான் தேசாயின் நினைவு தானாக குறுக் கிட்டு, 1000 கிலோவுக்கு மேல் தங் கத்தை அவர் பதுக்கி வைத்திருந்த பார்ப்பன ஊழலைச் சுட்டிக் காட்டி, “அதிகம் ஒன்றுமில்லை வெறும் 1 டன் தங்கம்தான்” என்று வஞ்சப் புகழ்ச்சியாக சொல்லி விட்டு, அதை இன்னும் அழுத்த மாகச் சொல்ல, “தங்கமான மனிதர் கேத்தன் தேசாய்” என்று வஞ்சப் புகழ்ச்சியைத் தொடர்ந்தார். வகுப்பாசிரியரின் எள்ளலை சரியாகப் புரிந்து கொண்ட மாணவர்கள் கைதட்டி ரசித்தனர். பின்னர் திராவிட மாடலின் இன் னுமொரு பரிமாணத்தை சுட்டிக் காட்ட எண்ணி, ”யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” என்றும் ”பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” என் றும், ”மனிதநேயம்” என்றும் திரா விட மாடலின் பொருளை உலகள வாக்கினார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கொள்கையைப் பற்றி புரிந்தோ, புரியாமலோ அவதூறாக சிலர் பேசி வருவதை குறிப்பிட்டு, “அறிவை அரிவாள் கொண்டல்ல, அறிவால் எதிர்கொள்ளும் இயக் கம் இது” என்று இலக்கியச் செறி வுடன் சொன்னதும் மாணவர்கள் மட்டுமல்ல, அந்த சொல்லாட்சி யின் காரணமாக வகுப்பு ஆசிரியரே சிரித்துக் கொண்டது மாணவர்க ளுக்கு மிகுந்த உற்சாகத்தை உண் டாக்கியது.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய வகுப்புகள்!
மொத்தத்தில் திராவிட மாடல் பற்றிய தெளிவை உண்டாக்கிய அந்த வகுப்பு முடிந்ததும், முதல் வகுப்பின் தொடர்ச்சியைப் போலவே, கழகப் பிரச்சாரச் செய லாளர் வழக்குரைஞர் அ. அருள் மொழி, “திராவிடம் ஏன்” எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார். அதில் ஆரிய மாடல் என்ன சொல் கிறது? திராவிட மாடல் என்ன செய்து வருகிறது? என்பதை பல் வேறு விசயங்களோடு ஒப்பிட்டு, எதற்காக நாம் திராவிட மாடலைக் கொண்டாடுகிறோம் என்பதை எளிதாகப் புரியவைத்தார். மூன் றாம் வகுப்பும் முதல் இரண்டு வகுப்போடு தொடர்புள்ளது போன்றே இருந்தது. அதன் தலைப்பு “அறிவியலும் பகுத்தறிவும்” ஆகும். வகுப்பாசிரியர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார். அவர் தனது வகுப்பை உலகம் தோன்றியதிலி ருந்து மூடநம்பிக்கைகளும், அதற்கு நேர் எதிராக வளர்ந்து வந்துள்ள அறிவியலையும் அடுத்தடுத்து விளக்கினார். அதைத் தொடர்ந்து அடுத்த வகுப்பாக ”கேள்வியும், கிளத்தலும்” எனும் தலைப்பில் மாணவர்களின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் பதில் சொல்லும் வகுப்பு தொடங்கியது. கழகத் துணைத் தலைவர், பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி, பொதுச்செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கேள்விகளை படிக்க, ஆசிரியர் பதிலளித்தார். கேள்விகள் பெரும் பாலும் இந்து அறநிலையத் துறையை சார்ந்தே இருந்தது.
ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு!
இறுதியாக முகாம் சிறக்கப் பணியாற்றிய அனைவரையும் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற் றது. முதலில் சமையல் கலைஞர் களான மதுரை சுப்பையா, சிவா, முருகன், பெருமாள், அருள், அமுத வள்ளி, சுந்தரி, மணிமாறன், மதுரை ராக்கு ஆகியோர்க்கு ஆடையணி வித்து ஆசிரியர் பாராட்டினார்.
தொடர்ந்து முகாம் ஒருங்கி ணைப்பாளர்களான தென் மாவட்ட பிரச்சாரக்குழுத் தலை வரான டேவிட் செல்லதுரை, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த. வீரன், மாவட்டச் செயலாளர் முருகன், மண்டலச் செயலாளர் அய்.ராமச்சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆ. சவுந்திர பாண்டி யன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் ச.குருசாமி, மண் டலத் தலைவர் சு.காசி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் மா.பால் ராஜேந்திரம், நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, நெல்லை மாவட்டச் செயலாளர் ச.இரா சேந்திரன், தூத் துக்குடி மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி ஆகி யோர்க்கு ஆசிரியர் ஆடையணிவித்து பாராட்டினார். தொடர்ந்து வீகே யென் உரிமையாளர் ராஜா, தி.மு.க. சுரண்டை நகரச் செயலாளர் வே. ஜெயராமன் ஆகியோர்க்கு ஆடை யணிவித்து மகிழ்ந்தார்.
பாராட்டப்பெற்ற கழகப் பொறுப்பாளர்கள்
மேலும் பயிற்சிப் பட்டறை வகுப்பை ஒருங்கிணைத்துப் பணி செய்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், சிறப்பாக வகுப்புகள் நடத்திய கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பிரச்சார செயலா ளர் வழக்குரைஞர் அருள்மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, பேராசிரியர் மு.சு.கண் மணி, முனைவர் ஞா.ச.சு.நல்லசிவன், பேராசிரியர் ஆ.திருநீலகண்டன், முனைவர் எழிலரசன், மாநில மருத்துவரணித் தலைவர் டாக்டர் கவுதமன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார், கிராம பிரச் சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், பகுத்தறிவு எழுத்தாளா மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு ஆகி யோருக்கும் தமிழர் தலைவர் பய னாடை அணிவித்து மகிழ்ந்தார்.
தமிழர் தலைவருக்கும் பெரியார் பயிற்சிப் பட்டறை சார்பாக ஆடை அணிவிக்க துணைத் தலைவர் பணிக்கப்பட்டதும், அந்த ஆடை யையே வாங் கிய ஆசிரியர் அதை அப்படியே துணைத் தலைவருக்கு அணிவித்து குபீர் மகிழ்ச்சியை கிளப்பினார்.
பிரியா விடை பெற்றுக் கொண்ட மாணவர்கள்
பிறகு மாணவர்கள் பகுதி பகுதியாக தமிழர் தலைவர் மற்றும் வகுப்பாசிரியர்களான இயக்கப் பொறுப்பாளர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். இறுதியாக மாணவர்களுக்கு பெரியாரியல் பயிற்சிப்பட்ட றைக்கான சான்றிதழ் வழங்கப் பட்டது. தமிழர் தலைவர் இதை தொடங்கி வைத்தார். கவிஞரும், பொருளாளரும் முடித்து வைத் தனர். அவ்வளவுதான் என்று சொன்ன பிறகும் மாணவர்கள் கலையவில்லை. ஆசிரியரிடம் புத்தகத்தில் கையெழுத்துப் பெறு வது, ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்வது, கவிஞர், பிரச்சார செய லாளருடன் ஒளிப்படம் எடுப்பது, புத்தகங்களில் ஒப்பம் பெறுவது என்று அரங்கம் கலகலப்பாகவே இருந்தது. ஒருவழியாக மதிய உணவை முடித்துக் கொண்டு அனை வரும் பிரியாவிடை கொடுத்து விடைபெற்றனர். இப்படியாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை யின் 43 ஆம் ஆண்டு நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment