வடசென்னை மின்நிலையம் 3ஆவது நிலை டிசம்பரில் மின் உற்பத்தி அமைச்சர் வி.செந்தில் பாலாஜி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

வடசென்னை மின்நிலையம் 3ஆவது நிலை டிசம்பரில் மின் உற்பத்தி அமைச்சர் வி.செந்தில் பாலாஜி

சென்னை, ஜூன் 13- வட சென்னை அனல் மின் நிலை யத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் மின் சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியதாவது:

வடசென்னை அனல் மின்நிலையத்தின் 3ஆவது நிலையில் டிசம்பரில் மின்உற்பத்தி தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது.விதிமுறை களுக்கு உட்பட்டே ஒப்பந்தப் புள்ளி வழங்கப்படுகிறது.கடந்த காலங்களை விட 2,500 மெகாவாட் கூடுதல் மின் தேவை உள்ளது.நாளொன்றுக்கு 8,800 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. வடசென்னை அனல் மின்நிலையத்தின் 3வது நிலையில் டிசம்பரில் மின்உற்பத்தி தொடங்கப்படும் மின் தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்தித் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் ஓராண்டில் 24 ஆயிரம் மின்மாற்றிகளை மாற்றியிருக் கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்


No comments:

Post a Comment