பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2022ஆம் ஆண்டிற்கான ஆசிய பிரிட்டன் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2022ஆம் ஆண்டிற்கான ஆசிய பிரிட்டன் விருது

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் விருது வென்றுள்ள பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாட்டிலிருந்து தகுதியுடைய பின்தங்கிய 100 மாணவர்கள், வெளிநாடுகளில் ஆராய்ச்சிக் கல்வியைப் பெறும் வகையில் திட்டம் வகுத்து வருகிறது.

சென்னை, ஜூன் 12 உள்நாட்டில் ஏராள மான பாராட்டுகளையும், விருதுகளையும் வென்ற பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பிரிட்டனில் அரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 

லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளு மன்றத்தில் அண்மையில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 2022-ஆம் ஆண்டுக்கான ஆசிய பிரிட்டன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சென்னையைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் குழுமத் தலைவர் டாக்டர் ஜே. சந்தீப் ஆனந்த் பெற்றார்.

பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்கி, உலகம் முழுவதிலும் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைப்பதை உறுதி செய்யும் அப்பழுக்கற்ற சாதனைக்காக 2022-ஆம் ஆண்டின் சிறந்த கல்வியாளருக்கான ஆசிய பிரிட்டன் விருதினை டாக்டர் ஆனந்த் பெற்றார். மேனாள் ஒன்றிய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பங்கேற்ற விருதுகள் வழங்கும் விழாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற கீழவை உறுப்பினர் விரேந்திர சர்மாவால் டாக்டர் ஆனந்த் கவுரவிக்கப்பட்டார்.

விருதினைப் பற்றிப் பேசிய டாக்டர் ஆனந்த், ஆராய்ச்சிக் கல்வி உடன்படிக்கைகள் மூலம் உலகளாவிய கல்வியை அணுக தங்கள் மாணவர்களுக்கு உதவுவதற்கான பெரிய திட்டங்களின் தொடக்கம்தான் இது என்றார். மேலும், "பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட ஒரு பெரிய கூட்டு நிறுவனம் எங்களை கவுரவப்படுத்தியதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். தென்னிந்தியாவிலுள்ள மிகவும் கிராமப்புற பின்தங்கிய மாணவர்களைக் கொண்டே நாங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். வெறும் புள்ளிவிவரங்களைக் காட்டுவதற்கு மாறாக சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க இதுபோன்ற முற்போக்கு சிந்தனை செயல்முறையை ஊக்குவிப்பதன் மூலம் நாங்கள் இதைச் செய்கிறோம். அதுதான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று டாக்டர் ஆனந்த் கூறினார்.

No comments:

Post a Comment