2022இல் 70 பாலஸ்தீனியர்கள் படுகொலை இஸ்ரேலின் அட்டூழியம் தொடர்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

2022இல் 70 பாலஸ்தீனியர்கள் படுகொலை இஸ்ரேலின் அட்டூழியம் தொடர்கிறது

ரமல்லா, ஜூன்  7- இஸ்ரேலிய ராணுவத்தால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப் பகுதி யில் பாலஸ்தீன சிறுவன் கொலை செய்யப் பட் டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான மேற்குக் கரைப் பகுதியில் இஸ் ரேல் ஆக்கிரமிப்பு செய் துள்ளது. ஆக்கிர மிக்கப் பட்ட பகுதிகளில் இஸ் ரேலிய மக்களைக் குடி யேற்றம் செய்யும் வேலை நடக் கிறது. பன்னாட்டு விதிகளின் கீழ் இந்த ஆக்கிர மிப்பு மற்றும் குடியேற்றம் ஆகியவை சட்டவிரோதம் என்றா லும் அமெரிக்காவின் உதவியோடு இந்தப் பணி களை இஸ்ரேல் செய்து வருகிறது. குடியேற்றத் திற்கு இடையூறாக இருக் கும் கட்டடங்களை மட் டுமின்றி மக்களையும் அப்புறப் படுத்தி வருகி றார்கள்.  2022 ஆம் ஆண் டில் மட்டும் இது வரை யில் 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொலை செய்யப்பட்டி ருக்கிறார் கள். இவர்களில் பெண் களும், சிறுவர்க ளும் அடங்குவார்கள். இத்தக வலை கொலை  செய்யப் பட்டோர் குடும் பத்தினரின் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப் பின் தலைவரான முகமது ஷேஹட், ‘‘இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 18 வய திற்குக் கீழ் உள்ள சிறு வர்களின் எண்ணிக்கை 13 ஆகும். ஏழு பெண்க ளும் கொல் லப்பட்டவர் களில் அடங்குவார்கள்’’ என்றார். 17 வயதான ஓடே முகமது ஓரே யின் கொலை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்தக் கொ லையை பாலஸ்தீன சுகாதாரத்துறை உறு திப்படுத்தியது. இஸ்ரே லிய ராணுவத்தின் குண்டு களால் துளைக்கப்பட்ட அவர் ரமல்லாவில் உள்ள பாலஸ்தீன மருத்துவ வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டார். மார்பைக் குண்டு துளைத்ததால் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த ஏழு நாட்களில் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் நான்காவது பாலஸ்தீனி யர் ஓடே முகமது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலைகளைத் தொடர்ந்து, "இஸ்ரேலின் சட்டவிரோத, கொடூர நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும்’’ என்று பன்னாட்டு சமூகத் திற்கு பாலஸ்தீனம் வேண் டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் மேற்கொள் ளும் போர்க் குற்றங்க ளுக்கு எதிராகத் தலையிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். தனிப் பட்ட முறை யில் இந்தக் குற்றங்களுக்கு இஸ் ரேலிய பிரதமர் நப்டாலி பென்னட்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாலஸ்தீன பிரத மர் முகமது ஸ்டயே குற் றம் சாட்டியிருக்கிறார்.


No comments:

Post a Comment