குரூப்-1 முதன்மைத் தேர்வு : முடிவுகள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

குரூப்-1 முதன்மைத் தேர்வு : முடிவுகள் வெளியீடு

சென்னை, ஜூன்.30 குரூப்-1 முதன் மைத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் நேர்கா ணலுக்கு 137 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர்.

தமிழ்நாட்டில் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2020ஆ-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது.

முதல்நிலை,முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் இதற் கான பணியிடங்களுக்கு தகுதியான வர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

முதல்நிலைத் தேர்வு கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு, பின் 2021ஆ-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி நடத்தப்பட்டது. இதன்முடிவுகள் டிசம்பர் 14-ஆம் தேதி வெளியாகின. இதில் முதன்மைத் தேர்வுக்கு 3,800 தேர்வு செய்யப்பட்டனர். இவர் களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இந்த தேர்வை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்த முதன் மைத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி நேற்று (29.6.2022) வெளியிட்டது. அதில் நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற 137 பேரின் பட்டியல் இடம் பெற் றுள்ளது. அடுத்ததாக நேர்முகத் தேர்வு சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க வரும்தேர்வர்கள் அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். இதுதொடர்பான தகவல் தேர்வர் களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப் படும். கூடுதல் தகவல்களை ஷ்ஷ்ஷ்.tஸீஜீsநீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணைய தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித் துள்ளது.

No comments:

Post a Comment