தமிழ்நாட்டில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை, ஜூன்.30 கரோனா தொற்று பாதிப்பு குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் நேற்று (29.6.2022) புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 25 ஆயிரத்து 657 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோத னைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் கத்தார் நாட்டில் இருந்து வந்த இரண்டு நபர்கள், ஜெர்மனி, ஈராக், தஜிகிஸ்தான், அய்க்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவர் மற்றும் டில்லியில் இருந்து வந்த ஒருவருக்கும், தமிழ்நாட்டில் ஆயிரத்து 820 நபர்கள் என மொத்தம் ஆயிரத்து 827 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் 6 கோடியே 59 லட்சத்து 37 ஆயிரத்து 305 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் மூலம் 34 லட்சத்து 73 ஆயிரத்து 116 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப் படுத்தும் மய்யங்களில் 10 ஆயிரத்து 33 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 764 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 25 ஆயிரத்து 57 ஆக உயர்ந் துள்ளது. மேலும் சென்னையில் 771 பேர், செங்கல்பட்டில் 316 பேர், திருவள்ளூரில் 134 பேர், கோயம்புத்தூரில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என பொது சுகாதாரத் துறை இயக்கு நரகம் குறிப்பிட்டுள்ளது.No comments:

Post a Comment