சென்னை, மே 19 பேரறிவாள னுக்கு மீள்வாழ்வளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று (19.5.2022) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன்படி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-அய் பயன்படுத்தி விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் தலை
வர்கள் வரவேற்பு தெரிவித்துள் ளனர்.
இந்நிலையில் பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் திருமாவளவன் தெரிவித்துள் ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பேரறிவாளன் விடுதலை: அமைச்சரவையின் முடிவு களுக் குக் கட்டுப்பட்டவரே ஆளுநர்!
இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு!
பேரறிவாளனுக்கு மீள் வாழ் வளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment