சின்ன சின்ன செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

சின்ன சின்ன செய்திகள்

கட்டணமில்லா பயணத்தில் 91.85 கோடி பெண்கள் பயன்

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயண திட்டத்தின் மூலம் இன்று வரை 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு முன் னேற்றம் அடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பெண்கள் வேலை தேடுவதை நிறுத்திவிட்டார்கள்

இந்தியாவில் இளைஞர்கள் தகுந்த வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் வேலை தேடுவதையே நிறுத்தி விட்டதாக சிவிமிணி எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக 2 கோடி பெண்கள் நிரந்தரமாக வேலை தேடுவதையே நிறுத்திவிட்டதாகவும் இந்த அறிக்கை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

உலகின் மிகவும் வயதானவர்  119 வயதில் காலமானார்

உலகின் மிகவும் வயதான நபராக கருதப்படும் ஜப்பானிய பெண் கேன் தனகா தனது 119ஆவது வயதில் வயது மூப்பின் காரணமாக காலமானார். 

இவர் பிறந்த ஜனவரி 2, 1903இல் அதே ஆண்டில் தான் ரைட் சகோதரர்களும் வானில் முதல் முறையாக பறந்தனர். தனகாவின் மறைவிற்குப் பின், இப்போது உலகின் வயதான நபராக பிரெஞ்சு கன்னியாஸ்திரியான லூசில் ராண்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறை

தமிழகத்தில், அரசு வேலையிலிருக்கும் பெண் ஊழியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும், அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டால், குழந்தையை பராமரிக்க 270 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டசபையில் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment