முதியோர் மருத்துவமனை: குழு அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

முதியோர் மருத்துவமனை: குழு அமைப்பு

சென்னை, மே 26 கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளா கத்தில் கட்டப்பட்டுள்ள முதியோர் மருத்துவமனையின் கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய அய்அய்டி பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில தேசிய முதியோர் மருத்துவமனை ரூ.151 கோடியே 17 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனா காலத்தில் இந்த கட்டடம் கரோனா சிறப்பு மருத்துவ மனையாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கரோனா தொற்று முற்றுக்கு வந்த நிலையில், அந்த கட்டடத்தை தேசிய முதியோர் மருத் துவமனையாக மாற்ற முதல்வர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த மருத்துவமனை தேசிய முதியோர் மருத்துவமனையாக மாற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

இதனையடுத்து மருத்துவமனையை தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களிலும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பல இடங்களில் காரை பிய்த்துக்கொண்டு பொள, பொளவெனக் கொட்டுவது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்பு தான் முதியோர் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

இதன்படி மருத்துவமனையை ஆய்வு சென்னை அய்அய்டி பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. சென்னை அய்அய்டி கட்டட தொழில் நுட்பம் மற்றும் கட்டுமான மேலாண்மை துறை பேரா சிரியர் மனு சந்தானம், நெடுஞ்சாலைத்துறை பொறியா ளர்கள் வாசு தேவன், பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்த குழு விரைவில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment