மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
சென்னை,மே23- இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு, தமிழ் நாட்டில் கரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாகவே, குடும்ப வன்முறைச் சூழல் மிக மோசமாக இருந்ததைக் குடும்ப நல ஆய்வில் வெளியான விபரங்கள் காட்டியிருந்தன. தொற் றின் போது குடும்ப வன்முறை அதி கரித்த விபரங்களும் வந்தன. தற்போது சவீதா மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத்துறை, சென்னையில் திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த, பெரும்பாலும் 30வயதுக்கு மேற்பட்ட 250 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், குடும்பங்களில் நிலவும் கடுமையான சூழல் பற்றிய மேலதிக விபரங்கள் வந்துள்ளன.
அதன்படி, குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாக 38.2 சதவிகிதம் பெண்கள் தெரிவித்துள்ளார்கள். இது, ஆய்வுக்கு உட்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் குடும்ப வன்முறையை சந்திப்பதை எடுத்துக்காட்டுகிறது. அவர்களில் உடல் ரீதியிலான வன் முறையை எதிர்கொள்வோர் 28.7 சதவிகிதம், பாலியல் வன்முறையை எதிர்கொண்டிருப்போர் 9.1 சதவிகி தம், உளவியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகியிருப்போர் 12.6 சதவிகிதம், உணர்வுரீதியான வன்முறையை சந்தித்தவர் 15.4 சதவிகிதம் ஆகும்.
திருமணத்திற்கு பின் ஒரு முறை யாவது அறைவது, குத்துவது உள் ளிட்டு உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொண்டிருப்பதாக 28.7 சதவி கிதம் பேர் தெரிவித்திருக்கிறார்கள். சுய மரியாதைக் குறைவாக நடத்தப் படுவதும் அதிகமாக இருக்கிறது. வன்முறைக்கு ஆளான பெண்களில் 32.3 சதவிகிதம் பேர் மருத்துவ சிகிச் சையை நாட நேர்ந்திருப்பது நிலைமை யின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள், பெரும்பாலும் குடிப்பழக்கம் மிகுதியாக கொண்டிருப்பதை ஏற்க னவே ஆய்வுகள் வெளிப்படுத்தின; இந்த ஆய்விலும் அதுவே வெளிப் பட்டுள்ளது.
குடும்ப வன்முறையைத் தடுக்க சட்டம் வந்த பின்னரும் கூட, ஆணா திக்க சமூக கட்டமைப்பில், இது குற்றம் என்பதை விட, பெண்கள் சகித்து கொண்டு அல்லது ஏற்றுக் கொண்டு போக வேண்டிய விசயம் என்பதாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் கூடுதலான கவனம் செலுத்த வேண் டுமென சில நாட்களுக்கு முன் அர சுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியி ருந்தோம். உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அதில் பட்டியலிட்டிருந்தோம்.
தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து, தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண் டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். -இவ்வாறு கே.பால கிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

No comments:
Post a Comment