டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 30 டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

 இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுயவிவரக் குறிப்புடன் https://awards.tn.gov.in இணைய தளத்தில் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், 8 கிராம் தங்கத்திலான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபரை, தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment