பரியார் கேட்ட கேள்விக்கு இன்னும் விடையே இல்லை. கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்றொரு மனிதனுக்கு சமத்துவமாக்கக் கூடாது என்ற கேள்விதான் அது. மனிதன் மனிதனாக வாழ வேண்டும் எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோலவே எந்த மனித னும் எனக்கு மேலானவன் அல்ல என்றாக்கவே திராவிடர் கழகத்தைத் தொடங்கி அதையே கொள்கையாக்கி, சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா என்று ஆதிக்கச் சமூகத்தின் முதுகில் விளாசியவர் பெரியார்.
எதற்காக மனிதனுக்கு ஜாதி வேண்டும்? இந்த நாட்டைத் தவிர வேறு எங்கேனும் இந்த அவலம் உண்டா? ஜாதி என்பது என்ன? வாழ்வியல் கோட்பாடா? நன்நெறியா? ஜாதி என்பது அறிவியலா அல்லது அறிவா? இல்லை ரத்தத்தில் ஜாதி உண்டா என்று கேட்பாரே திராவிடர் கழகத் தலைவர் நம் தமிழர் தலைவர். ஆக எதற்காக மனிதர்கள் தன்னை இழிவு படுத்துகிற ஜாதியைக் கட்டி அழ வேண்டும்?முதலில் அந்த ஜாதி நமக்கான ஒன்றா? சிந்திப்போம்.
மதமும், ஜாதியும் தமிழருக்கில்லை
மூன்று மதங்களுமே நமக்கு அந்நியம் தான்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆரியரால் இந்துவானோம்.
800 ஆண்டுகளுக்கு முன் வந்தவர்களால் முஸ்லிம் ஆனோம்!
அதற்கு 500 ஆண்டுகளுக்குப் பின் வந்தவர்களால் கிறிஸ்துவர்கள் ஆனோம்! இவர்களுக்கெல்லாம் முன்னால் தமிழ் பேசும், மதம் இல்லாத திராவிடராக மட்டுமே இருந் தோம்! கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை, மயிலாடும்பாறை உள்ளிட்ட அகழ் வாராய்ச்சிகளின் பெறப்பட்ட பல்வேறு பானை ஓடுகள், ஆபரணங்கள், எழுத்துகள் ஆகிய வற்றை கார்பன் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி யதில், தமிழர்கள் வேளாண்மை, வணிகம், மொழியறிவு, எழுத்தறிவுப் பெற்று சிறந்த ஆற்றங்கரை நகர நாகரிகமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கிற அடையாளங்கள் பெறப்பட்டது. அவர்கள் தம் வாழ்வில் முன்னோர்களையும் வீரர்களையும் வழங்கும் பொருட்டு நடுகல் வழிபாடு மட்டுமே இருந்திருக்கிறது. கடவுளும் மதமும் இருந் ததற்கான சான்றுகளே எள்ளளவும் இல்லை...அஃதே இல்லை எனும்போது ஜாதி மட்டும் எங்கிருந்து வந்தது.
இந்த நாட்டின் பூர்வீக குடிகளான திரா விடர்களை - சிறந்த உழைப்பாளிகளை வட நாட்டிற்கு வந்தேறிகளாக வந்தவர்கள் தந்திரத் தால் ஏய்த்துப்பிழைக்க பல கூறுகளாக நம் மைப் பிரித்து ஒரே வேலையை அவர்களுக்குக் கொடுத்தால் அறிவு வந்ததும் அவர்கள் கேள்வி கேட்பார்கள் என்று ஒவ்வொரு வேலையை ஒவ்வொருவரிடம் கொடுத்து அதற்கென்று இன்ன இன்ன ஜாதி என்று பகுத்து அது கடவுள் ஏற்படுத்தியது, கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாதது என்று கட்டுக் கதை கட்டி அவர்களுக்குள் ஒரு இன்பம் கொடுக்க "உனக்கும் கீழே ஒருவன் இருக் கிறான் நீ அவனை விட உயர்ந்தவன்" என்று மக்களை ஏமாற்றி வைத்தனர். இன்னொரு பக்கம் சூத்திரன் என்ற இழிவான பெயர் சூட்டி தமக்கு அடிமைகளாக்கிக் கொண்டனர்.
இந்த அடுக்குமுறை வருண அமைப்பில் கீழே பெண்கள் அனைவரையும் வைத்து பெண்ணடிமையை மிகுதியும் தூபமிட்டு வளர்த்தவர்கள் அவர்களே.
சூத்திரனுக்கு திருமண உரிமையும் கிடை யாது என்பதால்தான் திருமண மேடையில் சில மணி நேரம் அவர்களுக்குப் பூணூல் அணி வித்து யாகம் வளர்த்து இயற்கையை வழிபடும் இந்த இனத்திற்கு யாகம் வளர்க்கும் தம்முடைய தீ வழிபாட்டு முறையைப் புகுத்தி பெண்ணை தானமாகக் கொடுத்து விடும் கேவலமான முறையை வளர்த்து விட்டவர்கள் அவர்களே.
அவர்கள் வருகைக்கு முன் பழந் தமிழர் மரபில் இவையெல்லாம் அறவே இல்லை.
'யானும் நீயும் எவ்வழி அறிதும், செம்புலப் பெய நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்ற காதல் வாழ்வையே கொண்டிருந்தனர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம் மூத்த தமிழ் மக்கள். இடையில் புகுந்த ஆரியத்தால் பழக்கங்களை புரட்டிப்போட ஒரு புரட்சியாளர் வந்தார். அவர்தாம் பெரியார்! அவர் ஏற்படுத்திய சுயமரியாதைத் திருமணங் கள் ஜாதியையும் பெண்ணடிமைத் தனத்தை யும் ஒழித்துக்கட்டி அமைதிப் புரட்சியை நாடெங்கும் மலர வைத்தது.
முன்பெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் வந்து சென்றதும் "பிடிச்சிருக்கா மா?" என்று பெண்ணைக் கேட்பார்கள். எங்கள் பிள்ளைகள் நாங்கள் சொல்வதைத் தட்ட மாட்டார்கள் என்று சொல்லிக்கொள்வதைத்தான் பெற்றோர் கள் பெருமையாக நினைப்பார்கள். ஆனால் தந்தை பெரியாரின் தீவிர சுயமரியாதைப் பிரச்சாரத்திற்குப் பின்னால் நிறைய மாற்றத் தைக் காண முடிகிறது.
"மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் ஒருவ ரை ஒருவர் பிடித்தால் சரி" என்று பேசுவதை இப்போது பெற்றவர்களும் பெருமையாக நினைக்க தொடங்கியிருக்கிறார்கள். இது தந்தை பெரியார் கண்ட தன்மான இயக்கத்தால் வந்த மாற்றம்.
இளைஞர்களும் நிறையவே ஜாதி மறுப்பு திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள். அத்தகைய பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் காணும் வாய்ப்பை ஏற்படுத்துகிற ஒரு மிகப்பெரிய சந்திப்பு இடமாக இந்த மன்றல் ஒரு மகத்தான பணியைச் செய்கிறது.
திருமண மய்யங்களில் எல்லாம் ஜாதி பார்த்து ஜாதகம் பார்த்து திருமணம் செய்வோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஜாதி பாக்காதீங்க, ஜாதகம் பார்க்காதீங்க, மனதை மட்டும் பாருங்க ஒரு திருமணத்திற்கு ஆண் பெண் இரண்டு பேர் தவிர மூன்றாவது நபருக்கு என்ன வேலை அவர்கள் தலையிடு வது அநாகரிகம் என்ற பெரியாரின் சொற்படி மண விழாக்களை நடத்தி ஜாதி ஒழிப்பு பெண்ணடிமை ஒழிப்பு உணர்வை வளர்க்கும் மிகப்பெரிய கருவியாகத்தான் இந்த மன்றல் நிகழ்வு திராவிடர் கழகத்தால் நடத்தப்படுகிறது. எதிர்நீச்சல் போட்டு இப்பணிகளை செய்ய இந்த இயக்கம் தவிர வேறொன்று ஏது இங்கே!
ஜாதகம் சரியில்லை என்ற பெயரில் நூற்றுக்கு 90 திருமணங்கள் தடைபட்டு போகிற நிலை இங்கு இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்து அவர்களின் விவரம் அறிந்து அவர் களைத் தொடர்பு கொண்டு, பேசி, பழகி, உடற் பரிசோதனையும் செய்துகொண்டு முறையாக தம் வாழ்வை இனிமையாக பகுத்தறிவுடன் வகுத்துக் கொள்ளும் ஓர் இடம்தான் இந்த மன்றல் விழா!
ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் சமபங்கு ஏற்கும் சம உரிமை படைத்த இணை யர்களாகும் ஒரு விழா!
சுயமரியாதை உணர்வைப் பேணும் கட வுள் மறுப்பை ஏற்றுக் கொண்டு பகுத்தறிவா ளர்களாக வாழும் நம்முடைய தோழர்கள் இணையேற்பு நடத்திக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியது. வேறு வழி இல்லா மல்தான் அவர்களின் கருத்துக்கு இசைந்து போகிறோம் என்று திருமண நிகழ்வுகளில் பலரும் சொல்லுகிற நிலையிலே எதிர்காலத்தில் பெரியாரிலை வாழ்வில் கடைபிடிக்க முடியாத சூழல் இதனால் ஏற்படும் என்பதால் நம்முடைய கொள்கை உறவுகளை கழகக் குடும்பங்களாக வார்த்தெடுக்கவும் அன்னை மணியம்மையார் அவர்கள் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இன்று ஆண்டுக்கு 400 மற்று முதல் 500 வரை ஜாதி மறுப்புத் திருமணங்களை அமைதியாக நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த சுயமரியா தைத் திருமண நிலையம்தான் இந்த மன்றல் நிகழ்வை முன்னெடுத்துச் செய்கிறது. ஜாதி மறுப்பு மட்டுமல், மத மறுப்பு, துணையை இழந்தோர், மண முறிவு பெற்றோர் என எல் லோரும் இணையை கண்டறிந்து வாழ மன்றல் இணைதேடும் பெருவி££வை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜாதி மறுப்பு திருமணமே அறிவார்ந்த
தலைமுறையை உருவாக்கும்
இதற்குமுன் 2012இல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்நிகழ்வு ஏற்படுத்திய தாக்கங்களால் பல்வேறு ஊர்களிலும் மன்றல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. இனி யும் நடைபெற உள்ளன.
மேலும் நெருங்கிய இரத்த உறவுக்குள் ளேயே திருமணம் செய்து கொள்வது அறிவி யல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் அடுத் தடுத்த தலைமுறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியிருக் கையில் முற்றிலும் புதியதோர் இனக்கலப்பு மூலமே வலுவான மனித இனத்தை நாம் பெற முடியும் என்ற அடிப்படையிலும் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நன்மையைக் கொடுக்கின்றன. எனவே தொடர்ந்து இதை பரப்புரையாக்கு வோம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் நமக்கு வழி காட்டுகிறார். வாருங்கள் தோழர்களே பெரு மளவு திரள்வோம்!
கொள்கைக் குடும்பமாக இருக்கும் நம் தோழர்கள் - தன் வீட்டுப்பிள்ளைகளுக்கு திரு மணத்திற்கு இணை தேடிக் கொண்டிருக்கும் நம் தோழர்கள் பெருமளவு இந்நிகழ்வை பயன்படுத்தி கொள்கை உறவுகள் குடும்ப உறவுகளாகவும் இணைந்து இயக்க வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்போம்.
ஜாதி ஒழிப்புக் களத்திலும் முன்நிற்போம்!
மே 29 அன்று மன்றலிலே ஒன்றுகூடுவோம்!

No comments:
Post a Comment