மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 20, 2022

மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (3)

 மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (3)

4. தூக்கமும் - மிக முக்கிய தேவை - மூளையில் சேரும் மூடுபனியை விரட்டிட!

போதிய தண்ணீர் குடித்தல், உடற்பயிற்சி, ஊட்டச் சத்து நிறைந்த உணவு எவ்வளவு முக்கியமோ - மனதின் இறுக்கத்தின் வடிவமான மூளையின் மூடுபனியை விரட்டிட நல்ல உறக்கமும் இன்றியமையா தேவை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

போதிய தூக்கமின்மை என்பது நமது சிந்திக்கும் திறனை வெகுவாகப் பாதிக்கிறது.

உணவு செரிமானம் இன்மை உள்பட பல தொல்லைகளும் தூக்கமின்மையின் உடன் பிறப்புகளாகும்!

டாக்டர் போ. சரவ்ஹிசு என்ற தூக்க நிபுணர் கூறுகிறார்:  "தூக்கமின்மை நமது எண்ண ஓட்டத் தினை (SleepingOcean.com) வெகுவாகக் குறைக்கிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய நமது கருத்துவெளியிடுவதற்கான  (Reaction) நேரத் தையும்கூட வெகுவாகப் பாதிக்கிறது. 

அத்துடன் தூக்கக் குறைவின் காரணமாக நினைவு ஆற்றலையும் அது வெகுவாகக் குறைக் கிற தீமையும் உண்டு. மூளையின் செல்களும்கூட ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வதும் இதனால் வெகுவாகப் பாதிக்கப்படும்" என்கிறார்!

டாக்டர் ஹிசு "ஒரு தூக்க அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதைவிடாமல்  பின்பற்றிடத் தவறாதீர்கள். அதாவது குறிப்பிட்ட நேரத்திற்குத் தூங்கச் சென்று, குறிப்பிட்ட நேரத் தில் விழிப்புக் கொள்ளும் அந்த அட்டவணைக்கு ஆளானால் நமது உடல் கடிகாரமும் அதனை வெகுவாக முறைப்படுத்திடவும் உதவும் - வார விடுமுறை நாள்களாக இருந்த போதிலும்கூட அந்த திட்டத்தினை மாற்றாமல் கடைப்பிடிப்பது, நமது மூளையில் மூடுபனி சேராமலிருக்கப் பெரிதும் உதவிடக் கூடும்!

நாளும் இப்படி குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழிக்கும் பழக்கம் இன் னொரு கோணத்திலும் மிகவும் வரவேற்கத்தக்க தாகும். மூளைக்கு நல்ல ஓய்வு; உடலுக்கும் நல்ல ஓய்வு தருவதாக அது அமையக் கூடும். அதுவும் ஒருவகை இளைப்பாறுதல் (Relaxation) தானே! அப்படி ஒரு தூக்கப் பழக்கத்தை ஏற்படுத்தினால் எளிதில் தூக்கமும், எளிதான விழிப்பும், அதே நேரத்தில் ஆழ்ந்த உறக்கமும், அதன்மூலம் ஏற்படும் அருமையான வாய்ப்பும் ஏற்படக் கூடும்!

இப்படிப்பட்ட பழக்கத்தால் வளர்ந்த மனத் தெளிவும், மாசில்லா சிந்தனைப் பழக்கமும் வரும் வாய்ப்பும் ஏற்படக் கூடும்!

தூக்க நேரத்திற்குமுன் காபி குடிப்பதைக் கைவிடுங்கள்.

தூங்குவதற்கு ஓரிரு மணிக்கு முன் திரைப் படங்கள், தொலைக்காட்சி பார்த்தல் இவை களைத் தவிர்ப்பது அவசியம் (ஆனால் நம்மில் பலரும் இந்த விதியைமீறும் "குற்றவாளிகளே!").

தூங்கப் போகுமுன் குளித்தல் - வெது வெதுப்பான வெந்நீரில் அல்லது சூடான தேநீர் ஒரு குவளை குடித்தல்  முதலிய பழக்கம் இருந்தால் அதுவே உங்கள் மூளைக்கு ஒரு 'சிக்னலை' அனுப்பும். தூக்கம் நம் கண்களைத் தழுவும் நேரம்  வர இருக்கிறது என்று அறிவிப்பது போன்று அவை உதவும்.

இரவு உணவு எப்போதும் லகுவான, மென்மையான- எளிதில் செரிமானம் உள்ள உணவாக இருப்பின் நல்லது.

உறங்கச் செல்வதற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன் - இரவு உணவை சாப்பிட்டு - படித்தல் மற்ற சில இளைப்பாறும் ஓய்வு - மனச்சலனங்கள் அற்ற வகையான புத்தகப் படிப்பு - இவை ஆழ் உறக்கத்திற்குப் பெரிதும் துணை செய்யும்.

கூடுமான வரை தூங்கும் படுக்கை அறை களில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாமல் பார்த்துக் கொண்டு படுக்கைக்குப் பக்கத்தில் புத்தகங்கள் வைத்து குறிப்பிட்ட நேரம் படித்து உறங்கும் பழக்கம் வெகுவான மனதின் மூடுபனி யால் மூளை உறையாமல் இருக்கப் பெரிதும் உதவும். 

மன இறுக்கத்தை விரட்டி, ஒருவரை உற்சாகத் துடன் கடமையாற்ற ஆயத்தமாம் - இதன் மூலம்."


No comments:

Post a Comment