நிலக்கரி பற்றாக்குறை அதிகரிப்பால் மின்சார உற்பத்தி பாதிப்பு ஆபத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

நிலக்கரி பற்றாக்குறை அதிகரிப்பால் மின்சார உற்பத்தி பாதிப்பு ஆபத்து

புதுடில்லி, மே 31- நாட்டில் மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மின்சார உற் பத்திக்கு தேவைப்படுகின்ற நிலக்கரி பற்றாக்குறையே அதிகரித்து வருவதாக ஒன்றிய பாஜக அரசின் மின்துறை அமைச்சகத் தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவின் பல் வேறு பகுதிகளில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவ தாக ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக் கையைச் சுட்டிக்காட்டி பன்னாட்டு செய்தி நிறு வனமான ராய்ட்டர்ஸ் எச்சரித்துள்ளது. 

செப்டம்பர் வரையி லான காலாண்டில் அதிக மின் தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மின்தடை கடு மையாக இருக்கும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் வரையி லான காலாண்டில் இந்தி யாவுக்கு உள்ளூரிலிருந்து 154.7 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது கணிக்கப் பட்ட 197.3  மில்லியன் டன் நிலக்கரியை விட 42.5 மில்லியன் டன் குறைவு.  இந்த வீழ்ச்சி முன்பு கணிக்கப்பட்டதிலிருந்து 15 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. மின் தேவை அதிகரித்திருப்பது, மின் நிலையங்களில் உற் பத்தி  குறைந்திருப்பது ஆகி யவை காரணங்களாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த 38 ஆண்டு களில், வருடாந்திர மின் தேவை என்பது தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளது. இதை பார்க்கும் போது, இந்தியாவில் ஏற்பட் டுள்ள கடுமையான எரி பொருள் பற்றாக்குறை யையே இது காட்டுகிறது. 

உக்ரைன் மீது ரஷ்யா மோதலால் உலகளாவிய நிலக்கரியின் விநி யோகம் பாதிக்கப்பட்டு விலை வர லாற்றில் இதுவரை இல் லாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதனி டையே, இறக்குமதியை அதிகரிக்க இந்தியா பல்வேறு முயற் சிகளை  மேற்கொண்டது. இறக்குமதியின் மூலம் நிலக்கரி இருப்பை அதி கரிக்காவிட்டால் ஏற்கெ னவே வெட் டப்பட்ட நிலக்கரியின் விநியோகம் மேலும் குறைக்கப்படும் என எச்ச ரித்துள்ளது. இருப்பினும், நிலக்கரியை இறக்குமதி செய்ய பல் வேறு மாநிலங்கள் இன் னும் ஒப்பந்தம் மேற் கொள்ளவில்லை. ஜூலை மாதத்திற்குள், நிலக்க ரியை இறக்குமதி செய் யாவிட்டால் மின்நிலை யங்களில் நிலக்கரி பற்றாக் குறை ஏற்படும். ஏப்ரல் இறுதி வரையில், ஒரே ஒரு மாநிலம் மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந் தத்தை மேற்கொண்டுள் ளது. நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால், ஜூலை மாதத்திற்குள் இந்திய நிறுவனங்களில் நிலக்கரி தீர்ந்துவிடும் என் றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறி யுள்ளது. 2023 மார்ச் மாதம் நிலக் கரி தேவை 784.6 மில்லி யன் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது முன்பு கணிக்கப்பட் டதை விட 3.3 சதவீதம் அதிகம்.

No comments:

Post a Comment