“மக்களை திசை திருப்பினால் உண்மை மறைந்து போகுமா?” இலங்கைக்கும் இந்தியாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 20, 2022

“மக்களை திசை திருப்பினால் உண்மை மறைந்து போகுமா?” இலங்கைக்கும் இந்தியாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை

மேனாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

புதுடில்லி. மே.20 பேரின வாதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றம் என்று அனைத்தி லும் இலங்கைக்கு இந்தியா ‘டப்’ கொடுத்து வருகிறது.

இது குறித்த புள்ளிவிவரங் களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  மேனாள் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

மேலும், மக்களை திசை திருப்பினால் உண்மை மறைந்து போகாது என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றால் பெரும் பொருளாதார நெருக்கடி யில் இலங்கை சிக்கியுள்ளது.

மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் பதவியை விட்டு விலகி னார். மகிந்த ராஜபக்சே இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை யில் ராஜபக்சே-வுக்கு சொந்தமான இடங்கள் பலவும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்தியாவிலும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனை களால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வழிபாட்டு மற்றும் மத அடை யாளமாக விளங்கிவரும் இடங் களில் பேரின வாதத்தை கையில் எடுத்து மக்களை திசைதிருப்பி வருகின்றது. இதை குறிக்கும் வகையில் ராகுல் காந்தியின் பதிவு உள்ளது.


No comments:

Post a Comment