சென்னை, மே 19 பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்த நிலையில், பேரறி வாளனை விடுவித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று (18.5.2022) உத்தர விட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து நடிகர் சத்யராஜ் காட்சிப்பதிவு
ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொலியில் அவர் கூறியிருப்ப தாவது;- பேரறிவாளனின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அற்பு தம்மாள், குயில்தாசன் மற்றும் அறிவின் குடும்பத்தார் அனை வருக் கும் என்னுடைய மகிழ்ச்சி யையும், வாழ்த்துக் களையும் பகிர்ந்து கொள் கிறேன்.
இந்த விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல ஆண்டுகளாக பேரறிவாளன் விடுதலைக்காக போராடிய அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும், தமிழ் உணர் வாளர்களுக்கும், வழக்குரைஞர் களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக்கு இது ஒரு போராட்டம், இதை நிச்சயம் உலகம் பாராட்டும். இவ்வாறு நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment