கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு

இலக்கிய அரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை, மே 28  மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இலக்கிய அரங்கம், கவியரங்கம், நாட்டுப்புற இசையரங்கம், தெம் மாங்குத் தேனரங்கம்,கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று சென்னைதெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று  (27.5.2022) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 4ஆம்  தேதி மாலை 5 மணிக்கு வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்.நகரில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடக்கும்இலக்கிய அரங்கில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடக்க உரையும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலை உரையும் ஆற்றுகின்றனர்.

ஜூன் 5ஆம்  தேதி மாலை 5 மணிக்கு திருவான்மியூர் மருந் தீஸ்வரர் கோயில் மண்டபத்தில் நடைபெறும் கவியரங்கத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உரையாற்றுகிறார். 

7ஆம்  தேதிமாலை 5 மணிக்கு செம்மஞ்சேரியில் நடக்கும் நாட்டுப்புற இசையரங்கத்தை துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமியும், 9ஆம்  தேதி மாலை 5 மணிக்கு சைதாப்பேட்டை - வேளச்சேரி சாலையில் நடைபெறும்.

 தெம்மாங்குத் தேனரங்கத்தை துணைப்பொதுச் செயலாளரும், உயர்கல்வி அமைச்சருமான க.பொன் முடியும், 12ஆம்  தேதி மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் மார்க் கெட்டில் நடக்கும் கருத்தரங் கத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவும் தொடங்கி வைக்கவுள்ளனர்.

 இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment